உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வங்கதேசத்தில் கிறிஸ்துவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்: போப் பகிரங்க குற்றச்சாட்டு

 வங்கதேசத்தில் கிறிஸ்துவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்: போப் பகிரங்க குற்றச்சாட்டு

வாடிகன் சிட்டி: வங்கதேசம் உட்பட பல நாடுகளில் கிறிஸ்துவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, போப் லியோ கவலை தெ ரிவித்துள்ளார் . கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் 16ம் லியோ, சமூக வலைதளத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: உலகின் பல்வேறு பகுதிகளில், கிறிஸ்துவர்கள், பாகுபாட்டையும், துன்புறுத்தலையும் அனுபவிக்கின்றனர். குறிப்பாக வங்கதேசம், நைஜீரியா, மொசாம்பிக், சூடான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அனைத்து வன்முறைகளும் முடிவுக்கு வரவும், பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படவும் நாம் பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு கூறியுள்ளார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சிறுபான்மையினரை பாதுகாக்க முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தோல்வியடைந்திருப்பதை போப் லியோவின் சமூக வலைதள பதிவு எடுத்துக்காட்டுகிறது. கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு, ஹிந்துக்கள், பவுத்தர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மேலும், வழிபாட்டு தலங்களும் முஸ்லிம் குழுக்களால் குறி வைத்து தாக்கப்படுவது சகஜமாகியுள்ளது. கடந்தாண்டு, ஆகஸ்ட் 5 முதல் 2025 ஜ னவரி 8ம் தேதி வரையிலான காலகட்டத்தில், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான 134 வன்முறை சம்பங்கள் நடந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை