உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபாச வீடியோ மிரட்டல் ஐ.டி., பெண் தற்கொலை 

ஆபாச வீடியோ மிரட்டல் ஐ.டி., பெண் தற்கொலை 

ஹெச்.ஏ.எல்.: நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக உறவினர் மிரட்டியதால், ஐ.டி., நிறுவன பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு ஹெச்.ஏ.எல்., பகுதியில் வசித்தவர் சுஹாசி சிங், 24. மாரத்தஹள்ளியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த 12ம் தேதி ஹெச்.ஏ.எல்., பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த உறவினர் பிரவீன் சிங், 28 என்பவரை சந்திக்க சென்றார். அப்போது திடீரென, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய சுஹாசியை, பிரவீன் மீட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் உயிரிழந்தார். ஹெச்.ஏ.எல்., போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.சுஹாசியும், பிரவீனும் உறவினர்கள். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர். அடிக்கடி வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று வந்தனர். அப்போது, இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதை, பிரவீன் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோவை காட்டி அடிக்கடி தன்னுடன் உல்லாசமாக இருக்க வர வேண்டும். இல்லாவிட்டால் வீடியோவை உனது பெற்றோருக்கு அனுப்புவேன். சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.இதற்கிடையில் சுஹாசி, வேறு ஒரு வாலிபருடன், 'டேட்டிங்' செய்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த பிரவீன் கோபம் அடைந்துள்ளார். கடந்த 12ம் தேதி சுஹாசிக்கு போன் செய்து ஹோட்டலுக்கு வரவழைத்தார்.பிரவீன் தொந்தரவு கொடுத்ததால் மனம் உடைந்த சுஹாசி, தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்தது தெரிந்தது. பிரவீன் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ் மைந்தன்
ஜன 22, 2025 14:35

இது ராமசாமி மண் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்


Sampath Kumar
ஜன 19, 2025 17:07

இது எல்லாதுக்கும் முதல் காரணம் பெண்கள் கல்வி பொருளாதார சுதந்திரம் சொந்தக்காலில் நிற்கும் திமிர் சும்மாவா சொன்னாரு நம்ம காஞ்சி பெயரியவர் பொம்மனாட்டிகளை படிக்கச் வேலைக்கு அனுப்பாதேரர்கள் அது ஆபத்தில் முடியும் என்று இப்போ புரியுதா சனாதனம் ஏன் முக்கியம் என்று


Bahurudeen Ali Ahamed
ஜன 19, 2025 12:40

இதைப்பார்த்து வருத்தப்படுவதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை, நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஒருத்தனுடன் நெருக்கமான உறவில் இருப்பது மற்றோருவனுடன் டேட்டிங் செல்வது இது என்ன கலாச்சாரம், ஒருவனை காதலித்தாலும் உடலளவில் நெருங்காமல் உள்ளத்தளவில் நெருக்கமாய் இருப்பதுதான் இதுவரை இருந்தது , இப்பொழுது? ஒழுக்கம் எப்பொழுதும் காத்துநிற்கும்


Mani . V
ஜன 18, 2025 05:52

அது எப்படின்னே புரியல. படித்த பெண்கள். திருமணம் செய்யாமல் ஹோட்டலில் சந்திக்கிறார்கள், நெருக்கமாக? இருக்கிறார்கள். கொஞ்ச நாளில் வேறு ஒருவருடன் டேட்டிங் செல்கிறார்கள். அப்புறம் குத்துதே, குடையுதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை