உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 15 ல் நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைப்பு

ஜூன் 15 ல் நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட் முதுகலை நீட் நுழைவு தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளதாவது:ஜூன் 15, 2025 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த முதுநிலை நீட் நுழைவு தேர்வு கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்பாடு செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மறு தேர்வு நடத்துவதற்கான திருத்தப்பட்ட தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இவ்வாறு தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மணியனு
ஜூன் 03, 2025 12:02

ஐயா,அது முதுகலை அல்ல முதுநிலை.ஆங்கிலேயர் காலத்தில் எல்லா படிப்புகளுக்கும் பி.ஏ.,எம்.ஏ. தான் வழங்கப்பட்டது.அப்போது இளங்கலை,முதுகலை என இருந்தது.தற்போது இளநிலை,முதுநிலை என்பதுதான் சரியான சொல்லுவோம்.


மீனவ நண்பன்
ஜூன் 02, 2025 21:45

அமெரிக்காவில் படிக்க செல்லும் மாணவர்கள் GRE Toffil போன்ற எக்ஸாம் ஆன்லைனில் பல ஆண்டுகளாகவே இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் எந்த பிரச்னையும் இல்லாமல் பங்கேற்றார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை