உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.2025 - 26ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கணினி மூலமாக நடைபெறும் இந்தத் தேர்வுகள், காலை, மதியம் என இரு ஷிப்டுகளாக நடைபெறும் என்றும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், முதுநிலை நீட் தேர்வை 2 ஷிப்ட்களாக நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவுக்கு தடை விதித்ததுடன், இந்த தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும். 2 ஷிப்ட்கள், 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்துவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்று தங்களது உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
மே 31, 2025 00:21

என்ன செய்யவேண்டும் என்பது அரசுக்கு தெரியும். எல்லைமீறி எல்லாவற்றுக்கும் சுப்ரிம் கோர்ட் உத்தரவு போடுவது சரியல்ல. அரசின் வேலைகளில் மூக்கை நுழைக்க சுப்ரிம் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது.


உண்மை கசக்கும்
மே 30, 2025 20:10

எல்லா தேர்வுக்கும் இந்த மாதிரி வழக்கு போட வேண்டியது. உச்ச நீதிமன்றத்தில் பல வருடங்களாக தேங்கி கிடக்கும் பல ஆயிரம் வழக்குளக்கு முதலில் தீர்ப்பு சொல்லுங்கள்.


மீனவ நண்பன்
மே 30, 2025 20:05

விரைவாக தீர்ப்பு வழங்கியிருப்பது பாராட்ட தக்கது .


GMM
மே 30, 2025 20:02

இரு ஷிப்ட். இரு மாறுபட்ட வினா தாள். ஒரே முதுநிலை தேர்வு. இதில் புகார்கள் கூடும். நீட் தேர்வை நிறுத்த சட்ட உதவி கிடைக்கும். விரும்பி செய்த குளறுபடி.? ஆங்கில மருத்துவ சிகிச்சை, மருந்து விற்பனையில் அபரிமித வருவாய். நீட் நீக்கினால் மருத்துவ கல்வியில் நன்கொடை பெருகும். பங்கு பெற உதவும். எதற்கு எடுத்தாலும் செலவு இல்லாத நிர்வாகத்தை அணுகாமல் விலை உயர்ந்த உச்ச நீதிமன்றம் அணுகுவது சரியல்ல. வழக்கு வழக்கறிஞர் வர்த்தகமாக மாறி வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிர்வாகத்தை அணுக கூறுவது இல்லை. மத்திய அரசு முறை படுத்துவது இல்லை?


மீனவ நண்பன்
மே 30, 2025 21:36

நீங்க மூலிகை மருத்துவமோ இயற்கை மருத்துவமோ எடுத்துக்குங்க


Srinivasan Krishnamoorthy
மே 30, 2025 22:51

JEE/IIM exams are conducted over different days and they do normalization. This is followed for several years. Only Neet is politicised and courts help. Why courts object only for Neet


Kulandai kannan
மே 30, 2025 19:24

வந்துட்டாங்கப்பா பஞ்சாயத்துக்கு


புதிய வீடியோ