உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி : சாதனை படைத்தது இஸ்ரோ.

விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி : சாதனை படைத்தது இஸ்ரோ.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ புதிய சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் செயற்கை கோளை , பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டுடன் ஜன.1 ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இந்த இந்த ராக்கெட் பூமியிலிருந்து 650 கிமீ தொலைவில் நிலைநிறுத்திய பின், பூமியில் இருந்து 350 கி.மீ தாழ்வட்ட பாதையில் போயம் (POEM ) என்ற பகுதியில் 10 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதில் ஒன்றிலிருந்து தான் எக்ஸ்ட்ரோ லைட் என்ற செல் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு மின்சாரம் தயாரிக்க முடியுமா என மேற்கொண்ட சோதனை வெற்றிபெற்றது. இதையடுத்து விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது.ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன. இந்நிலையில் இந்தியா முதல் முறையாக விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பச்சையப்பன் கோபால் புரம்
ஜன 06, 2024 08:52

மின்சாரம் பத்தாம நேபாளத்தில் வாங்குறாங்களமா அதை வேற பெருமையா சொல்லிக்கிறாங்க!! இப்போ வானத்துலே மின்சாரம் தயாரிக்கறாங்களாமா!


வெகுளி
ஜன 05, 2024 23:42

மின்சார நாயகன் அண்ணன் ஆற்காட்டார் சார்பாக வாழ்த்துக்கள்...


VSaminathan
ஜன 05, 2024 22:28

what about the cost of production?Sindubad Story.


K.n. Dhasarathan
ஜன 05, 2024 21:25

சந்திராயன் மூலம் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு பல வேலைகள் நடைபெற்று விட்டன.நிலவில் மண் தோண்டப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டு, லேந்டர் நகர்வு என பல.


Sakthi Parthasarathy
ஜன 05, 2024 20:19

சிறப்பு, வானிலை அறிக்கை துல்லியம் இன்னும் அதிகம் தேவை. அதிகனமழை மொட்டையாக இல்லாமல், எத்தனை நீர் திடம் கொண்ட மேகக்கூட்டம் என்பதை கணித்தால் இன்னும் சிறப்பா இருக்கும்


Senthoora
ஜன 06, 2024 06:08

அவங்களுக்கு நாட்டு பிரச்னையை விட உலகலாவில் சாதனை படைக்க ஆசையாம்.


Bye Pass
ஜன 05, 2024 19:25

விண்வெளியில் உற்பத்தி செய்து ரிமோட் மூலம் பூமிக்கு அனுப்ப முடியுமா?


S.L.Narasimman
ஜன 05, 2024 19:06

வாழ்த்துக்கள்..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை