உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது.ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி என்ற நிறுவனம் புவிசார் அரசியலை சமாளிக்கும் திறனை வைத்து ஆசியாவில் சக்திவாய்ந்த நாடுகள் (Asia Power Index) பட்டியலை தயாரித்து உள்ளது. ஆசியா - பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகளின் பொருளாதார திறன், ராணுவ திறன் மற்றும் மற்ற ராஜதந்திர செல்வாக்கு ஆகியவை அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n95wkzyt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது2வது இடத்தில் சீனா3வது இடத்தில் இந்தியா4வது இடத்தில் ஜப்பான்5வது இடத்தில் ஆஸ்திரேலியா6வது இடத்தில் ரஷ்யா7 வது இடத்தில் தென் கொரியா8 வது இடத்தில் சிங்கப்பூர்9 வது இடத்தில் இந்தோனேஷியா10 வதுஇடத்தில் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.இதற்கு முன்பு இந்தியா 4வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறி இந்தியா சாதனை படைத்து உள்ளது.இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: ஜப்பான் மற்றும் சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இளம் தலைமுறையினர் காரணமாக, வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதுடன், வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கையும் உயரும். தூதரக ரீதியிலும், பிராந்திய பாதுகாப்பிலும் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குவாட் போன்ற அமைப்புகளில் இடம் பெற்றுள்ளது, பிராந்திய பேச்சுவார்த்தைகளில் தலைமைப்பண்பு ஆகியவை காரணமாக பிராந்திய பாதுகாப்பில் இந்தியாவின் நிலை வலிமை ஆகி உள்ளது. இதற்காக எந்த ராணுவ ரீதியிலும் எந்த நாட்டுடனும் கூட்டணி வைக்கவில்லை. பிலிப்பைன்சுக்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி உள்ளிட்ட பாதுகாப்பு ஒப்புந்தங்கள் இந்தியாவின் விரிவடைந்துவரும் புவிசார் அரசியல் நோக்கங்களை எடுத்து காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு பின்பு, இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவு மீண்டது. இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் மாபெரும் வலிமையான ஜிடிபி வளர்ச்சி காரணமாக 3வது பெரிய பொருளாதாரமாக உருவாக இந்தியா உருவெடுத்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

spr
செப் 26, 2024 16:36

"தூதரக ரீதியிலும், பிராந்திய பாதுகாப்பிலும் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குவாட் போன்ற அமைப்புகளில் இடம் பெற்றுள்ளது, பிராந்திய பேச்சுவார்த்தைகளில் தலைமைப்பண்பு ஆகியவை காரணமாக பிராந்திய பாதுகாப்பில் இந்தியாவின் நிலை வலிமை ஆகி உள்ளது. இதற்காக எந்த ராணுவ ரீதியிலும் எந்த நாட்டுடனும் கூட்டணி வைக்கவில்லை. பிலிப்பைன்சுக்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி உள்ளிட்ட பாதுகாப்பு ஒப்புந்தங்கள் இந்தியாவின் விரிவடைந்துவரும் புவிசார் அரசியல் நோக்கங்களை எடுத்து காட்டுகிறது." பாராட்டுவோம். நம் எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் ஆனால் என்ன இருந்து என்ன பயன் இன்னமும் செந்தில் பாலாஜி போன்ற ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதோடு பாராட்டப்படுகிறார்களே


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2024 18:20

ஆசிய பசிபிக் பிராந்தியம் என்றால் ஆப்பிரிக்க, ஐரோப்பிய, மத்திய கிழக்கு பகுதிகள் தவிர மற்ற அனைத்தும் என்று பொருள். அதாவது பசிபிக் மற்றும் இந்துமஹா சமுத்திரம் சார்ந்த நாடுகள். இது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், தெற்கு அமெரிக்க பகுதிகள் என்று அர்த்தம். அனைத்து விபரங்களும் தர்மராஜ் தங்கரத்தினம் அவர்கள் கொடுத்த இணைய தளத்தில் தெளிவாக உள்ளது.


SUBBU,MADURAI
செப் 25, 2024 19:20

தர்மராஜ் தங்கரத்தினம் அவர்களிடம் நாம் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது.


raja
செப் 25, 2024 17:40

மோடியின் தலைமையில் இந்தியா ஒரு வல்லரசாக மாறும் நாள் வெகு அருகில் ஆனால் என்ன உலக புகழ் ஊழல் 2g கூட்டு கலவானிகல் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்துக்கும் கான் கிராசுக்கும் பொசு பொசு ன்னு வயிறு எரியும்


YESPEE
செப் 25, 2024 17:16

செய்திகளை முந்தி தருவது தினமலர்


Barakat Ali
செப் 25, 2024 17:09

முதல் பிரதமராக இரும்பு மனிதர் பட்டேல் இருந்திருந்தால் ? இப்போது ஏங்கி பயனில்லை ....


Barakat Ali
செப் 25, 2024 17:07

தகவலை பார்த்தேன் .... மலேசியா கூட பதினோராவது இடம் .... பாகிஸ்தான் பதினாறாம் இடம் ..... பல இடங்கள் இறங்கியிருக்கு ..... சுதந்திரம் அடைந்த பிறகு கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என்று முன்னேறாமல் இந்தியாவின் மீது பொறாமைப்பட்டு கெடுதல் செய்து கொண்டே வந்ததால் ஏற்பட்ட விளைவு ...... திருக்குறளை போற்றும் திராவிடமாடல் அவங்களுக்கு பிடிச்ச பாகிஸ்தானிடம் அழுக்காறு கைவிடச்சொல்லி வற்புறுத்தியிருக்கலாம் ....


RAMAKRISHNAN NATESAN
செப் 25, 2024 16:57

பிலிப்பைன்ஸ் க்கு நாம் பிரம்மோஸ் விற்ற பிறகு ஒரு குழு - விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் குழு - அங்கே பயிற்சியளிக்க சென்று வந்தது ..... எப்போது போனார்கள் என்கிற விஷயம் ரகசியமாக வைக்கப்பட்டது ....


RAMAKRISHNAN NATESAN
செப் 25, 2024 16:53

சீனாவின் இன்புட்ஸ் உள்ளபடி கிடைத்திருக்க வாய்ப்பில்லை .... அங்கேயும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது ..... சீனஅதிபரே மக்களுக்கு உணவுப் பஞ்சம் தொடர்பாக ஆலோசனைகளை .... சாரி ..... கட்டளைகளை வழங்கியதாக இரண்டாண்டுகளுக்கு முன்பே செய்தி வந்தது .... மோடிக்கு / அமித் ஷா வுக்கு நீண்ட ஆயுளும் அவசியம் ..... மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் .....


Apposthalan samlin
செப் 25, 2024 16:48

இது உலக சாதனை


RAMAKRISHNAN NATESAN
செப் 25, 2024 16:46

இந்தியா போற போக்கு அமெரிக்கா, சீனாவைப் பொறுத்தவரை சரியில்லை என்பதால்தான் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பங்களாதேசுக்கு இந்த நிலைமை .....


சமீபத்திய செய்தி