உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜமீரை துாக்கிலிட வேண்டும் பிரமோத் முத்தாலிக் ஆவேசம்

ஜமீரை துாக்கிலிட வேண்டும் பிரமோத் முத்தாலிக் ஆவேசம்

சிக்கமகளூரு: ''அமைச்சர் ஜமீர் அகமது கானை, எல்லையை விட்டு வெளியேற்ற வேண்டும், அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் வலியுறுத்துகின்றனர். ஆனால் அப்படி செய்ய கூடாது. ஜமீரை துாக்கில் போட வேண்டும்,'' என ஸ்ரீராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் வலியுறுத்தினார்.சிக்கமகளூரில், தத்தமாலை நிகழ்ச்சியில் பிரமோத் முத்தாலிக் பேசியதாவது:பெங்களூரின் சாம்ராஜ்பேட்டில் 25,000 வங்கதேச முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களை அமைச்சர் ஜமீர் அகமது கான், காப்பாற்றி வருகிறார். வாக்காளர் பட்டியலிலும் சேர்த்துள்ளார். எனவே ஜமீர் அகமது கானை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், எல்லையை விட்டு வெளியேற்ற வேண்டும் என, பா.ஜ.,வினர் வலியுறுத்துகின்றனர். எல்லை கடத்துவதோ, பதவியை பறிப்பதோ தேவையில்லை. இவரை ஆலமரத்தில் துாக்கில் போட வேண்டும்.ஜமீர் அகமது கான், இந்த நாட்டில் இருக்கவே லாயக்கு இல்லாதவர். மற்றவரின் கட்டடம், நிலத்தை விழுங்கி ஏப்பம் விட, அவர் அப்பன் வீட்டு சொத்தா.மற்றவரின் நிலத்தை அபகரித்து, முஸ்லிம்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறார். வக்பு சொத்து விஷயத்தை, அரசு தீவிரமாக கருத வேண்டும். மாநிலம் முழுதும் 9.40 லட்சம் ஏக்கர் நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. எனவே வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எங்களின் முழுமையான ஆதரவு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை