உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுள் தான் தீர்வு கொடுக்கணும்; தீர்ப்புக்கு முன்பு இறைவனை வேண்டிய தலைமை நீதிபதி

கடவுள் தான் தீர்வு கொடுக்கணும்; தீர்ப்புக்கு முன்பு இறைவனை வேண்டிய தலைமை நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அயோத்தி நில விவகாரத்தில் கடவுள் தான் தீர்வு கொடுக்க வேண்டும் என்று வேண்டியதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமஜென்பூமியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ஹிந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும், ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், மாற்று இடத்தில் 5 ஏக்கரில் மசூதி கட்டிக் கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெற்றிருந்த சந்திரசூட் தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கிறார். மற்ற நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில், நீதிபதி சந்திரசூட்டின் மஹாராஷ்டிராவில் உள்ள தமது சொந்த ஊரான கன்ஹேசாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'பல வழக்குகளை பார்த்துள்ளோம். ஆனால், அனைத்திற்கும் தீர்வை ஏற்படுத்த முடியாது. அதுபோன்று தான் அயோத்தி ராமர் கோவில் - மசூதி நில விவகாரம் வழக்கும் வந்தது. சுமார் 3 மாத காலம் இந்த வழக்கு என் முன்னே இருந்தது. கடவுள் தான் இந்த வழக்கில் தீர்வு காண வேண்டும் என்று வேண்டி கொண்டேன்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Rama Krishnan
அக் 24, 2024 16:52

கடவுளை வேண்டிக் கொண்டதில் தப்புமில்லை,தவறுமில்லை. எந்த மதக்கடவுளாக இருந்தால் என்ன நாதனுள்ளிருக்கையில் என்ற திருமூலர் வாக்கு எல்லா மதத்தினர்க்கும் பொருந்தக் கூடிய ஒன்றே. நீதிபதிகள் கடவுள் மேல் பற்று வைத்து வேண்டக் கூடாது என்று அரசியல் சட்டம் சொல்லவில்லை. மத சார்பின்மை என்பது கடவுளை வேண்டாதே என்று சொல்வது இல்லை.


HUMAYUN KABIR.R
அக் 22, 2024 10:12

தான் செய்த தவறுக்கு இறைவனை சாட்டி விட்டார். இனி இறைவனே சாட்சி. இறைவனின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.


J.Isaac
அக் 21, 2024 21:12

ரஞ்சன் கோகை போல் , எம் பி பதவிக்கு அடித்தளம்.


AMLA ASOKAN
அக் 21, 2024 09:44

கடவுள் தான் இந்த வழக்கில் தீர்வு காண வேண்டும் என்று வேண்டி கொண்டேன் என்று கூறும் அவர், வெவ்வேறு மதங்களுக்கான கடவுள்களை வேண்டிக்கொண்டாரா அல்லது இந்து தெய்வத்தை மட்டும் தான் வேண்டிக்கொண்டாரா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் . இந்திய அரசு சட்டத்தின் முன் கடவுளுக்கு வேலையில்லை .


ஆரூர் ரங்
அக் 21, 2024 13:24

அசல் அரசியல் சட்டப் புத்தகத்தின் முகப்பிலேயே ஹிந்து கடவுளர், புராண கதாபாத்திரங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.


s madhavan
அக் 21, 2024 08:19

அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மையை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்ட தீர்ப்பாகக் கருதமுடியாது. காந்தி தேசத்தில் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசுபவர்களை அஞ்ஞானிகள் என்றே கொள்ளவேண்டும். பெரும்பான்மை மக்களின், பணக்காரர்களின், அரசுகளின் வருப்பத்திற்கேற்ப தீர்ப்புதான் சரி என்று நீதிபதிகளும், மக்களும் நினைக்கத் துவங்கிவிட்டதின் பிரதிபலிப்பாகவே இத்தீர்ப்பை பார்க்கிறேன்.


ஆரூர் ரங்
அக் 21, 2024 13:28

இதே கோர்ட் உத்தரவுப்படி BB முஹம்மது தலைமையிலான அகழ்வாராய்ச்சி குழுவினர் ஆராய்ந்து ஹிந்து ஆலயத்தின் மீதுதான் மசூதி போன்ற கட்டிடம் கட்டப்பட்டது என அறிக்கையளித்தது. அரைகுறை தகவல்களை வைத்து கருத்துப் பதிவு செய்யக்கூடாது


J.V. Iyer
அக் 21, 2024 07:36

நீங்கள் ரிட்டையர் ஆவதற்கு முன்னாள் அப்படியே வக்ப் போர்டுஐ ஒழித்து ஒரு சட்டம் கொண்டுவாருங்கள். இறைவனும், ஹிந்துக்களும், ஹிந்துஸ்தானும் உங்களை கொண்டாடும்.


Sheik Nawfal
அக் 22, 2024 08:47

அறநிலையதுறை ஒழித்து விடலாமா?? அதன் சொத்தை புடுங்கி வேற ஒருவருக்கு கொடுத்து விடுவோமா ??


Dharmavaan
அக் 21, 2024 06:48

ஒய்வு வரும்போது எல்லாம் தத்துவம் சாத்வீகம் எல்லாம் வந்துவிடும்


ramani
அக் 21, 2024 05:59

வெளியே இப்படி சொல்லலாமா. திராவிஷ மாடல் உடனே பொங்கி எழுந்து விடுவார்கள். அவர்களுக்கு நல்லதெல்லாம் பிடிக்காது.


Kasimani Baskaran
அக் 21, 2024 05:50

காங்கிரஸ் ஆட்சி என்பது கிட்டத்தட்ட மொகலாயர்கள் ஆட்சி போலத்தான். சாம, தான பேத போன்ற கொள்கைகளை வைத்து நீதியையும் நிதியையும் முழுமையாக அனுபவித்தவர்கள் அவர்கள்தான். மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததால் இந்த நிலைமை வெகுவாக மாறி இருக்கிறது. பல பழைய வழக்குகளில் தர்மத்தின் பக்கம் தீர்ப்பு வருகிறது, இன்னும் வரும்.


Mani . V
அக் 21, 2024 05:46

அப்படின்னா நீங்கள் எல்லாம் வேஸ்ட். அப்படித்தானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை