உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரீமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 232 ரன்கள் இலக்கு

பிரீமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 232 ரன்கள் இலக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ : பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்து உள்ளது.பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடக்கும் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காட்டிய ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 34 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பவர்பிளேவில் 71 ரன்கள்ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 71 ரன்கள் எடுத்தது. ஹென்ரிச் கிளாசின் 13 பந்துகளில் 24 ரன்களுக்கும், அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தும் நிதிஷ்குமார் ரெட்டி 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தும், அபிநவ் மனோகர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் அரைசதம்ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும், இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு வெற்றி பெற 232 என்ற ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பெங்களூரு அணியின் ஷெப்பர்டு அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை