உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய வருமான வரி சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

புதிய வருமான வரி சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 1961ம் ஆண்டு முதல் தற்போது வரை நடைமுறையில் இருந்து வரும் வருமான வரி சட்டத்தில் உள்ள சட்டங்களை எளிதாக்குவதுடன், வரித்துறைக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் இடையேயான வழக்குகளை குறைப்பது, தேவையற்ற விதிகளை நீக்குவது, எளிமையான சொற்களை கையாளுவது உள்ளிட்ட திருத்தங்களுடன், புதிய வருமான வரி சட்டம் 2025, நடந்து முடிந்த பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேறியது. இந்த புதிய சட்டத்தில் எவ்வித புதிய வரி விகிதமும் விதிக்கப்படவில்லை. மேலும், சிக்கலான வருமான வரிச்சட்டங்களையும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 1961ம் ஆண்டின் வருமான வரிச்சட்டத்தில் 819 ஆக இருந்த பிரிவுகளின் எண்ணிக்கையை 536 ஆகவும், அத்தியாயங்களின் எண்ணிக்கை 47ல் இருந்து 23 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இப்புதிய சட்டம் அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ