வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரபேல்னு சொன்னாலே உலகம் அதிருதில்ல. வாழ்த்துக்கள்.
சண்டிகர்: ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்தார். இது தொடர்பாக, அவர் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ''மறக்க முடியாத அனுபவம்'' என பதிவிட்டுள்ளார்.ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு இன்று (அக் 29) ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். ரபேல் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k1s8olxc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூரின் போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ரபேல் போர் விமானத்திற்கு மவுசு கூடியது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை யை போது ரபேல் போர் விமானத்தின் பங்கு முக்கியத்துவமாக இருந்ததால், செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பயணம் செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியிருப்பதாவது: ரபேல் போர் விமான பயணம் ஒரு மறக்க முடியாத அனுபவம். நாட்டின் பாதுகாப்பு திறன்கள் எனக்குள் பெருமையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயணத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக இந்திய விமானப்படை மற்றும் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடந்த கால நிகழ்வுகள்!
ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் நாட்டுத் தலைவர் ஆனார். தற்போது 2 வது முறையாக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்து உள்ளார்.
ரபேல்னு சொன்னாலே உலகம் அதிருதில்ல. வாழ்த்துக்கள்.