உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி!

நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்தும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியாவில் தீபாவளி ஒரு பெரிய மற்றும் பிரபலமான பண்டிகை. இது இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவு வெற்றி பெற்றதையும், அநீதியின் மீதான நீதியின் வெற்றியையும் குறிக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு, இந்த பண்டிகையை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வாழ்த்துகிறேன். இவ்வாறு திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

தீபத் திருநாள்

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என் சக குடிமக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த புனிதமான தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்!

தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செழிப்பும் கிடைக்கட்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

மணிமுருகன்
அக் 20, 2025 21:18

பாரத ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


VENKATASUBRAMANIAN
அக் 20, 2025 14:05

எல்லோரும் தீபாவளி வாழ்த்துக்கள் கூறுவார்கள். ஆனால் தமிழ் நாடு முதல்வர் மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். இதுதான் திராவிட மாடல். இந்துக்கள் இன்னமும் புரிந்து கொள்ள வில்லையென்றால் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.


N. Ramachandran
அக் 20, 2025 13:42

திராவிட மாடல் அப்பா, துணை அப்பா ஆகியோர் ஈத் மிலாத், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற மதசார்பற்ற பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லுவார்கள். பொங்கல், தீபாவளி போன்ற மதம் சார்த்த பண்டிகைகளுக்கு வலது சொல்ல மாட்டார்கள். அனால் ஹிந்து மக்கள் ஓட்டு மட்டும் ஓங்கோல் முன்னேற்ற கட்சிக்கு வேண்டும். உலக மகா நடிப்புடா சாமி. கட்டுமரம் கொடுத்த ட்ரைனிங் அப்படி....


Kumar Kumzi
அக் 20, 2025 11:46

ஓங்கோல் துண்டுசீட்டு எப்போதும் போன்று இன்றும் மெளனவிரதம் இருப்பார்


xyzabc
அக் 20, 2025 10:22

சார், மேடம், எங்கள் தலைவர் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லமாட்டார். திராவிடத்துக்கு புறம்பானது.


ديفيد رافائيل
அக் 20, 2025 10:03

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Barakat Ali
அக் 20, 2025 10:03

இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ....


Amar Akbar Antony
அக் 20, 2025 09:42

உங்கள் பத்திரிக்கையில் பணிபுரியும் அனைவருக்கும் இப்பத்திரிக்கை வாசகர்களுக்கும் இந்த இனிய நாளாம் தீபாவளியில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.


senthil
அக் 20, 2025 09:32

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


திகழ் ஓவியன்
அக் 20, 2025 09:23

என்ன சொன்னாலும், இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு, உரைக்காது...மீண்டும் மீண்டும் தவறானவர்களையே, தேர்தலில் தேர்ந்தெடுப்பர்... காமராஜரையே தோற்கடித்த முதன்மை மாநிலம்...எல்லாம் இடஒதுக்கீடு...எல்லாம் தலையெழுத்து...


Venugopal S
அக் 20, 2025 13:55

கவலைப்பட வேண்டாம், இதேபோல் அடுத்த ஐந்து வருடங்கள் புலம்பிக் கொண்டே இருப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்!


முக்கிய வீடியோ