உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் ஜனாதிபதி; ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் புதைந்ததால் பரபரப்பு!

சபரிமலையில் ஜனாதிபதி; ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் புதைந்ததால் பரபரப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஹெலிகாப்டர் சக்கரம், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தில் புதைந்தது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஹெலிகாப்டரை மீட்டனர்.நான்கு நாள் பயணமாக ஜனாதிபதி முர்மு, கேரள மாநிலத்திற்கு வருகை தந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான இன்று அவர் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=72r1qh8c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர் பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்த ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறக்கம் செய்யப்பட்டது. திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்த பிறகு தான் ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட்டில் புதைந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். புதிதாக அமைக்கப்பட்ட தளம், எடை தாங்காமல் கீழே இறங்கி விட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஜனாதிபதியின் பாதுகாப்பு குழுவினர் இணைந்து ஹெலிகாப்டரை பத்திரமாக மீட்டனர். ஜனாதிபதி ஒருவர், தன் பதவி காலத்தில் சபரிமலைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.ஜனாதிபதி சபரிமலைக்கு வருவதையொட்டி இரண்டு நாட்கள், பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இரண்டு நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

R.Ganesan
அக் 22, 2025 20:36

ஜனாதிபதியின் ஆர்வம், கடவுள் பக்தி, பாதுகாவலர்களும் இருமுடி சுமந்து 18 படி ஏறி ஸ்வாமியை வணங்கியது , எல்லாம் சரி. ஆனால் இதன் காரணமாக இரண்டு நாட்கள் பொது தரிசனம் நிறுத்தப்பட்டு முன்பதிவு செய்தவர்கள் பாடு அதோகதி ஆனதே அதுதான் வருத்தமாகிறது. சபரிமலை தரிசனம் வருடத்தில் எல்லாநாட்களும் மற்றும் rope கார் வசதி என்று வந்தால்தான் பிரச்சனை தீருமோ? ஐயப்பனே வழி சொல்வானாகுக.


Rathna
அக் 22, 2025 20:32

சேட்டனுடைய நாட்டில் தொழிலாளர் யூனியன் பிரச்சனை. நாட்டில வேலை செய்ய மாட்டான். கல்ப் போயி ஒட்டகம் மேய்க்க மட்டும் ரெடி..


மாணிக்கம்
அக் 22, 2025 17:40

ஒரு நாளைக்கி கஷ்டப்பட்டா ஒண்ணும் குறைஞ்சிடாது.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2025 16:56

நம்மூரு திராவிஷங்க எல்லாம் சொந்த செலவுலேயா குடும்பத்தோடு உலக சுற்றுப்பயணம் போய்க்கிட்டு இருக்காங்க?


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2025 16:16

சுமார் 200 டன் எடை கொண்ட இயந்திரங்களை நாங்கள் 10, 12,15 மி மீ இரும்பு பிளேட்டுகளை போட்டு சர்வ சாதாரணமாக எடுத்து சென்றிருக்கிறோம். நமது குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு ஒரு இறங்கு தளம் கூட சரிவர அமைக்க முடியாத நிலையிலா நமது பொறியியல் துறையும் காவல்துறையும் இருக்கிறது ?


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2025 16:06

எலிகாப்டரில் சக்கரங்களை கீழ்ப்பகுதியில் வைத்திருப்பதால்தான் கான்கிரீட்டில் புதையுண்டு போக வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் இனி கேரளா மாநில எலிகாப்டர்களில் சக்கரங்களை மேலே காற்றாடிக்கு பக்கத்தில் வைக்க அரசு பரிசீலிக்கிறதாம்.


chandran
அக் 22, 2025 18:15

சுந்தரம் விஸ்வநாதன், இந்த ஹெலிகாப்டர் கேரளா அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல. இந்தியா விமான படைக்கு சொந்தமானது.. கொஞ்சம் நியாயமாக கருத்து சொல்லுங்க சார்.


திகழ்ஓவியன்
அக் 22, 2025 18:31

எலிகாப்டரில் சக்கரங்களை கீழ்ப்பகுதியில் வைத்திருப்பதால்தான் :: அறிவாளி எல்லா வண்டி ஏரோபிளான்ஸ் க்கும் சக்கரங்களை கீழ்ப்பகுதியில் தான் வைக்க முடியும் , இப்போ மழை தானே இல்லை மப்பு குழப்பமா


அப்பாவி
அக் 22, 2025 15:55

சொந்த செலவில் யாரும் வரமாட்டாங்க. அப்பப்போ வந்துக்கிடிருந்த கோவிந்த் இப்போ வர்ராறா? அரசு செலவில் ஊர்வலம்.


Modisha
அக் 22, 2025 20:23

ஸ்டாலின் குடும்பத்தார் போல …


V Venkatachalam, Chennai-87
அக் 22, 2025 21:34

நம்மோடு செயல்கள் அமானுஷ்யமாக கண்காணிக்க படுகிறது. க.உ.பீஸ் களுக்கும் இந்த விதிகள் உண்டு.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2025 13:46

இப்போ ஒண்ணும் கொறஞ்சு போகலை. நாளைக்கே எலிகாப்டர் தரை இறங்க அனுமதித்து முதல் சக்கரம் தரையை தொட்டது இறக்கை நின்றது கான்கிரீட் தளத்தின் வலு, கலக்கப்பட்ட நீரின் அளவு சேர்க்கப்பட்ட மணலின் அளவு மழை நீர் மற்றும் இதர அம்சங்கள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து விடுவார்கள். விசாரணைக்கமிஷன் அதிகாரிக்கு கார் பெட்ரோல் டிரைவர் பங்களா உதவியாளர் எல்லாம் அளிக்கப்படும். இந்த கமிஷனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்படும். விசாரணை அறிக்கையில் மழை நீர் சிமென்ட் கலவையில் கலந்தது என்றும் அந்த மழை நீரில் தீபாவளிக்கு வெடித்த பட்டாசுகளினால் எழுந்த புகையின் அளவு அதிகமாக இருந்தது என்றும் கூறுவார்கள். இதுபோன்று எலிகாப்டர் சக்கரம் தரையில் பதியாமல் இருக்க எடுக்கவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் வருங்காலத்தில் நீரில் மாசு கலப்பதை தடுக்கவும் இன்னோர் அறிவாளிகள் கொண்ட குழு அமைப்பார்கள்.


suresh Sridharan
அக் 22, 2025 13:32

சிமெண்ட் தளம் சிமெண்ட் போடவில்லை


Raj
அக் 22, 2025 13:15

பாதுகாப்பு குறைபாடு தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை