முதன்மை போராட்டம்!
இன்று நாட்டில் நடக்கும் முக்கிய போராட்டம், நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். அரசியலமைப்பு வெறுப்பினால் எழுத்தப்பட்டது இல்லை. நமக்கு கிடைக்கும் பாதுகாப்பு, நம் நாட்டின் மகத்துவம், அனைத்தும் அரசியலமைப்பிலிருந்து உருவானது. ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,வீட்டுக்கு அனுப்புங்கள்!
ஜார்க்கண்ட் அரசு ஓட்டுக்காக பழங்குடியினர் வாழும் பகுதிகளில் ரோஹிங்யா ஊடுருவல்காரர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்கிறது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு வங்கம் போன்ற நிலைமை ஏற்படக் கூடாது என்றால், ஹேமந்த் சோரன் அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்.ரவிசங்கர் பிரசாத்,லோக்சபா எம்.பி., - பா.ஜ.,வட கொரியாவால் ஆபத்தா?
உளவுத்துறை தகவலின்படி மஹா., துணை முதல்வர், தேவேந்திர பட்னவிசுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். யாரால் அவருக்கு ஆபத்து? வடகொரியா, லிபியா, உக்ரைன் அல்லது இஸ்ரேல் நாடுகளில் ஏதேனும் ஒன்றால் பட்னவிசுக்கு ஆபத்தா?சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா