உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் பலமடைந்து வரும் கூட்டுறவு இயக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் பலமடைந்து வரும் கூட்டுறவு இயக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' என பிரதமர் மோடி கூறினார்.டில்லியில் சர்வதேச கூட்டுறவு மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதே கூட்டுறவு ஒத்துழைப்புக்கான மாநாடு இந்தியாவில் முதல்முறை துவங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், நமது கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம். இம்மாநாட்டின் மூலம் இந்தியாவின் எதிர்கால கூட்டுறவுப் பயணத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவோம் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனுபவம் மூலம், சர்வதேச கூட்டுறவு மாநாட்டிற்கு 21ம் நூற்றாண்டிற்கான கருவிகளையும், புதிய உணர்வையும் பெறும். இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் விரிவடைந்து வருகிறது. உலகை பொறுத்த வரை கூட்டுறவு என்பது ஒரு மாதிரி. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அது கலாசாரத்தின் அடிப்படை. அது வாழ்க்கை முறையில் ஒரு அங்கம். இந்தியாவில் எட்டு லட்சம் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. அவற்றில் 98 சதவீதம் கிராமப்புற பகுதிகளில் உள்ளன. கூட்டுறவு அமைப்புகளுடன் 30 கோடி பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். கூட்டுறவு என்பது சர்வதேச ஒத்துழைப்பிற்கு முக்கியமாக உலகின் தெற்கு பகுதிக்கு புதிய ஆற்றலை கொடுக்கும் என இந்தியா நம்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Venugopal
நவ 25, 2024 22:36

நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் அதன் உறுப்பினர்கள் விருப்பத்தின் பேரில் மற்ற மாநிலத்தில் செயல் படாதபோதிலும் சென்ட்ரல் கவர்ன்மென்டின் மல்டி ஸ்டேட் கோவாபிரேட்டிவ் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மல்டி ஸ்டேட் கோவாபிரேட்டிவ் சட்டத்தில் வகை செய்தால் பல நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் நன்றாக செயல்படும். பெரும்பாலான ஸ்டேட் கோவப்படிவ் சட்டங்களில் அந்த சங்கங்களின் தொழிலாளர்கள் நிர்வாகக்குழுவில் பங்குகொள்ள முடியாது. கோவாப்பிரேடிவ் சட்டத்தில் டெபுடி ரெஜிஸ்ட்ராருக்கு கொடுக்கப்பட்டுள்ள மாஜிஸ்ட்ரியல் அதிகாரத்தை கூட்டுறவுத் துறையில் ஒரு லீகல்செல் அமைத்து அந்த செல்லில் உள்ள சட்ட வல்லுனர்களிடம் அந்த அதிகாரத்தை ஒப்படைக்கலாம். கடந்த காலகட்டத்தில் டெபுடி ரெஜிஸ்திரார் அவர்களால் போடப்பப்பட்ட பல தண்ட தீர்வை ஆணைகள் மண்புமிகு நீதிமன்றங்களில் தள்ளுபடி ஆகின்றன.


GMM
நவ 25, 2024 20:17

சுதந்திரத்திற்கு முன் கூட்டுறவு சங்கங்கள் உண்டு. பல கோடி குடும்பங்கள் வறுமை நீக்கியது கூட்டுறவு சங்கம். திராவிடர்கள் கூட்டுறவை சிதைத்து விட்டனர். மீனவர் கூட்டுறவு என்றால், மீனவர் மட்டும் இருக்க வேண்டும். சட்டத்தின் முன் சமம் என்று கூறி, கட்சியினரை உள்ளே அனுப்பி, ஊழல் புரிந்து சிதைத்து விட்டனர். தேசிய அளவில் சட்டம், விதிகள் வகுக்க வேண்டும். பால் கூட்டுறவில் உறுப்பினர் என்றால் 6 மாடுகள் வளர்த்து, பராமரிக்க வேண்டும். அது போல் நெசவாளர், விவசாய சங்கம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை