உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "தேர்தல் கமிஷன் பணி சிறப்பு" - பிரதமர் மோடி பாராட்டு

"தேர்தல் கமிஷன் பணி சிறப்பு" - பிரதமர் மோடி பாராட்டு

ஆமதாபாத்: காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி ஓட்டளித்தார். ஓட்டளித்த பின்னர் அவர் அளித்த பேட்டியில்; ஜனநாயகத்திருவிழாவின் தேர்தலில் மக்கள் மிக எளிதாக, எவ்வித சிரமமுமின்றி ஓட்டளித்தனர். வன்முறை இல்லாத சிறப்பான ஏற்பாடுகளை செய்த தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.ம் கட்ட லோக்சபா தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (மே 07) ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத்தில் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி ஓட்டளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gox1sd2u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

குழந்தைகளை கொஞ்சிய பிரதமர்

முன்னதாக பிரதமர் மோடியை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர். குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பிரதமர் மோடியிடம் காட்டிய போது, அதில் கையெழுத்திட்டார். தொடர்ந்து மக்கள் பலரும் பிரதமருடன் கைகுலுக்கினர். பல குழந்தைகளை கையில் வாங்கி கொஞ்சினார் பிரதமர். மேலும் பார்வையற்ற பெண் ஒருவரிடம் சென்ற பிரதமர் மோடி, நலம் விசாரித்தார். மோடியின் தோளில் கைவைத்து அப்பெண் உரிமையுடன் உரையாடினார்.பிரதமர் மோடியை காண குழந்தைகள் உட்பட மக்கள் கூட்டம் குவிந்தது. காண குவிந்த மக்கள், பிரதமர் மோடி உடன் மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தனது ஜனநாயக கடமையை ஆற்றிய பின், ஓட்டுச்சாவடி அருகே, மக்கள் மத்தியில் ஓட்டளித்து விட்டேன் என கையில் இருந்த மையை பிரதமர் மோடி காட்டினார்.

மக்கள் அனைவரும் ஓட்டளியுங்கள்!

ஓட்டுச்சாவடிக்கு வெளியே, நிருபர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: இன்று மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவு. தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. வன்முறை இல்லாத தேர்தல் இது. சிறப்பாக பணியாற்றிய தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுகள். ஜனநாயகத்தை மக்கள் பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஜனநாயகத் திருவிழாவின் தேர்தலில் மக்கள் மிக எளிதாக, எவ்வித சிரமமுமின்றி ஓட்டளித்தனர். வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் திரண்டு வந்து ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Krishnamurthy Venkatesan
மே 08, 2024 15:46

except tamilnadu என சொல்ல மறந்துவிட்டார்


K.n. Dhasarathan
மே 07, 2024 21:11

தேர்தல் கமிஷன் பனி சிறப்பு என்று அனைவரும் பாராட்ட வேண்டும், பிரதமர் மட்டும் பாராட்டுவது, எதோ டீலிங் முடிந்தது போல தான் தெரியுது ஒரு தன்னாட்சி பெட்ரா நிறுவனம் போல நடக்கவில்லையே ? T N சேஷன் என்று ஒருவர் இருந்தாரே, இந்திரா காந்தியையே சொல்படி கேட்க வைத்தார், அவர் வாழ்ந்த இடத்தின் மண் எடுத்து தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வைத்து போற்ற வேண்டும் அதிகாரிகளும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும், அரசியல்வாதிகளுக்கு ஆமாம் போட கூடாது நடக்குமா?


Venkatesan.v
மே 07, 2024 21:27

உண்மை டீலிங் முடிந்தது


ஆரூர் ரங்
மே 07, 2024 22:08

இந்திரா இறந்தது 1984. சேஷன் தேர்தல் அதிகாரியானது அதற்கு ஆறாண்டுகள் கழித்துதான். நேர்மை? பாதி லோக்சபா தேர்தல் முடிந்தநிலையில்.ராஜிவ் கொல்லப்பட்ட போது( அனுதாப அலை)காங்கிரசுக்கு வசதியாக தேர்தல் தேதிகளை அமைத்ததாக புகார்கள்.


GMM
மே 07, 2024 20:16

தேர்தல் ஆணையம் பணி சிறக்க, நிரந்தர பணியாளர்கள் தேவை மாநில, மாவட்ட, நகராட்சி அளவில் பணியாளர்கள் உதவி மட்டும் அதிகாரம் கூடாது ஆதார் போன்று, தேசிய அளவில் ஒரு அமைப்பு தேவை தெளிவான தகவல் இருந்தால், நிரந்தர வாக்காளர் எண் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகள் தேர்தலுக்கு முன் புதுப்பிக்க வேண்டும் சரியான ஆவணங்கள் இல்லாதவர் தாற்காலிக வாக்காளர் எண் அதாவது கள்ள குடியேறிகள் இந்த வாக்கு அனைத்தையும் கழித்து, வெற்றியை தீர்மானிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் பணியில் உச்ச நீதிமன்றம் அதிகாரம் செலுத்துவது கூடாது மற்ற சாசன அமைப்பு மீது மக்கள் மரியாதை குறைந்து விடும்


தாமரை மலர்கிறது
மே 07, 2024 20:07

தேர்தல் கமிஷனின் வேலை ஜூன் நாலாம் தேதி தான் சிறப்பாக நிறைவேறும் மிகவிரைவாக அரைமணி நேரத்தில் நானூற்றி ஐம்பது தொகுதிகளை மோடி கைப்பற்றும் நிலையில் உள்ளார் என்று அறிவிக்கும் நாலுமணி நேரத்தில் மோடியின் வெற்றியை சொல்லி, நூறு கோடி பிஜேபி தொண்டர்களின் வாயில் இனிப்பு செய்தியை ஊட்டும் தீபாவளி ஜூன் நாலாம் தேதி என்று தோன்றும் வகையில் இந்தியர்கள் கொண்டாடுவார்கள்


அப்புசாமி
மே 07, 2024 17:26

வேகாத வெயில்ல எலக்‌ஷன் தேதியை ஏ.சி ரூம்ல உக்காந்து வெக்கும் தத்திகள் சிறப்பாக பணி செய்யறாங்க. 60 பர்சண்ட்டுக்கும் குறைவாக ஓட்டுப்பதிவு நடக்கும்போதே இத்தனை பாராட்டு.


Easwar Kamal
மே 07, 2024 17:05

என்ன பாராட்டு பெருசா இருக்கே டீல் சிறப்பாக முடிஞ்சுருச்சு போல


venugopal s
மே 07, 2024 16:40

தானே ஆடி தானே மெச்சிக் கொள்வது போல் உள்ளது!


Thirumal s S
மே 07, 2024 14:31

இவர் போட்டு கொடுத்த ரூட்டுல எலக்சன் நடக்குது ஆதலால் நன்றி சொல்கிறார்


முருகன்
மே 07, 2024 12:11

நன்றி கடன் செலுத்த வேண்டும் அல்லவா


Narayanan Muthu
மே 07, 2024 12:10

இந்திய தேர்தல் ஆணையர்களும் உள்ளடக்கமே


மேலும் செய்திகள்







புதிய வீடியோ