உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசா போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு

காசா போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அதிபர் டிரம்பின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அதிபர் டிரம்பின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் சிறப்பான தலைமையை எடுத்துரைக்கிறது.பிணைக்கைதிகள் விடுதலை செய்ய வழி வகுக்கும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், அவர்களுக்கு நிம்மதியைத் தரும். காசாவில் நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V. SRINIVASAN
அக் 09, 2025 12:07

ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ஹமாஸ் மீது அதுவும் குழந்தைகள் பெரியவர்கள், பெண்கள் யார் மீதும் குண்டு மழை பொழியக்கூடாது இதை இஸ்ரேல் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்


ஆரூர் ரங்
அக் 09, 2025 11:11

திமுக வின் தீர்மானத்துக்கு பயந்துதான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ள ஒன்றிய அரசுக்கு மனமில்லை.


Saravanan
அக் 09, 2025 18:54

இரண்டாண்டு பிறகு இந்த போர் நிறுத்தம் செய்ய நிர்பந்தித்த அரசை, ரஷ்யா உக்ரைன் போரையும் நிறுத்த அறிக்கை விடுமாறு கேட்டு கொள்கிறென்


சமீபத்திய செய்தி