உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிரப்பள்ளி சென்ற ஹங்கேரி பிரதமர்

அதிரப்பள்ளி சென்ற ஹங்கேரி பிரதமர்

மூணாறு; கேரள மாநிலம் மூணாறில் சுற்றுப் பயணத்தை ஒரே நாளில் முடித்துக் கொண்ட ஹங்கேரி பிரதமர் விக்டர்ஓர்பன், நேற்று குடும்பத்தினருடன் அதிரப்பள்ளி சென்றார்.இவர் கேரளாவுக்கு மனைவி, இரண்டு மகள்களுடன் ஜன., 3ல் வந்தார். மாநிலத்தில் பல பகுதிகளுக்கு சென்றவர் ஜன., 12 மாலையில் மூணாறுக்கு வந்தார். திட்டமிடப்பட்ட பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக வந்தவர், இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதாக இருந்தது. நேற்று முன்தினம் மூணாறில் தனியார் தேயிலை கம்பெனியின் தேயிலை அருங்காட்சியத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.அதன் பின் வேறு எங்கும் செல்லாத நிலையில் பயணத்தை ஒரே நாளில் முடித்து, நேற்று காலை 11:00 மணிக்கு திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை