உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுகளை மனதில் வைத்து நிதியுதவி: பீஹாரில் பிரியங்கா குற்றச்சாட்டு

ஓட்டுகளை மனதில் வைத்து நிதியுதவி: பீஹாரில் பிரியங்கா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டுகள் மீது மட்டுமே குறியாக உள்ளது. அக்கூட்டணிக்கு பீஹார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பீஹார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது: தேர்தல் நெருங்குவதால், முதல்வர் மகிளா ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது மாதந்தோறும் அளிக்கப்படும் என அவர்கள் உறுதி அளிக்கவில்லை.அவர்களின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளும் திறன் பெண்களுக்கு உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரின் நோக்கங்களை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களின் ஓட்டுகளை மனதில் வைத்துமட்டுமே இந்த நிதியுதவியை அளித்துள்ளனர். அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும். உங்களுக்கான மரியாதையை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. உங்களின் பாதுகாப்பை அவர்களால் தர முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. காங்கிரஸ், பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்கும். நிலம் இல்லாத விவசாய குடும்பத்துக்கு நிலம் வழங்குவதுடன் அதனை பெண்கள் பெயரில் பதிவு செய்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

KRISHNAN R
செப் 26, 2025 22:16

ஏதோ உணவு இல்லாத நிலையில்,, ப்ரீ ரேசன் கொடுத்தா ஓகே.. ஆனால்,, ப்ரீ பஸ் என்ற ஓட்டு வங்கி ஊழல் அறிவித்தது.. தில்லி ஜாங்கிரிவால்... அவர்கள் தான்.. அந்த நோய் இப்போ பலவாக பெருகி வருகிறது.... அதான் உண்மை


V Venkatachalam
செப் 26, 2025 21:06

தேர்தல் ஐ மனதில் வைத்ததாகவே இருக்கட்டுமே அதுனால என்ன இப்போ? அந்த பெண்களை பணம் வாங்க வேண்டாம் நாங்க தர்றோம் ன்னு சொல்ல வேண்டியது தானே? அட்லீஸ்ட் எங்களுக்கு ஓட்டு போட்டா நாங்க தர்றோம் ன்னு கூட சொல்ல முடியலையே பாவம். இல்லாங்காட்டி ராவுலு மாதிரி ஏடிஎம் கார்டு அடிச்சி பீஹார் மக்கள் கையில் திணிக்கலாமே. அதுமாதிரி பண்ணியதால் அயோத்தியில் என்ன ஆச்சுன்னு மறந்துடலை போல. பாவம்.


ராஜ்
செப் 26, 2025 20:59

யார் யார் எதை சொல்லுவது என்று விவஸ்தை இல்லாமல் ஆகிவிட்டது


SUBBU,MADURAI
செப் 26, 2025 20:41

Congress is not secular, it is pluralistic. The difference is very important Secular means they protect individuals from imposition of religion Pluralistic means they let every community impose its laws on their own they believe in community rights, not individual rights. So for example look what Congress did in Shah Bano case.


பேசும் தமிழன்
செப் 26, 2025 20:18

அதெல்லாம் உங்கள் கான் கிராஸ் கட்சி செய்யும் வேலை..... ஓட்டுக்களை மனத்தில் வைத்து.... குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும் வக்காலத்து வாங்கும் செயலை செய்வது நீங்களும் உங்கள் கான் கிராஸ் கட்சியும் தான்..... அதனால் வாய் புளித்ததோ..... மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.


பேசும் தமிழன்
செப் 26, 2025 20:18

அதெல்லாம் உங்கள் கான் கிராஸ் கட்சி செய்யும் வேலை..... ஓட்டுக்களை மனத்தில் வைத்து.... குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும் வக்காலத்து வாங்கும் செயலை செய்வது நீங்களும் உங்கள் கான் கிராஸ் கட்சியும் தான்..... அதனால் வாய் புளித்ததோ..... மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.


nagendhiran
செப் 26, 2025 20:09

நீங்க பிண அரசியல் செய்வதை விட இது ஒன்றும் கேவலம் இல்லையே?


Saai Sundharamurthy AVK
செப் 26, 2025 19:53

ராகுல்காந்தியால் தூண்டிவிடப்பட்ட ஜென் இசட் போராட்டம் இப்போது கர்நாடகாவில் ஆளும் உங்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவே திரும்பி விட்டது. இதிலிருந்து தெரியவில்லையா ராகுல் ஒரு பப்பு என்று.... இந்தியா என்ன நேப்பாள், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மாதிரியான நாடா என்ன !! இங்கு யார் கலவரம், போராட்டத்தை தூண்டி விடுகிறார்களோ அவர்களுக்கு எதிராகவே எல்லாம் போய் முடியும். கெடுவான் கேடு நினைப்பான். உங்களின் நண்பர்களான பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு தெரிவித்து விடுங்கள்....!!!!! இந்தியர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல. யார் பிரச்சினைகளை தூண்டி விடுகிறார்கள் என்கிற விபரம் எல்லாம் உடனுக்குடன் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். இது காங்கிரஸுக்கு கொடுக்கும் கடும் எச்சரிக்கை என்று தான் சொல்ல வேண்டும்.


M Ramachandran
செப் 26, 2025 19:47

இந்த நாடுமாறி குடும்பதியய் விரட்டி அடிக்க வேண்டியது மிக அவசியம். தேசத்ரோகம் அரசு நிலம் திருட்டு அயல் நாட்டில்பிச்சை எடுப்பது அதற்க்கு அவர்களுக்கு அடிமைய்ய சாசனம் எழுதி கொடுத்து நம் நாட்டின் இறையாண்மையியக்கு ஊரு விளை வித்தல். இந்த திருட்டு கும்பலிய்ய கட்டிக்கொண்டு அழவதால் என்ன பயன்.


தாமரை மலர்கிறது
செப் 26, 2025 19:35

அரசியல் கட்சி என்பதே ஓட்டை மனதில் வைத்து தான் உதவி. ஸ்டாலின் இங்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். சோம்பேறிகளை ஊக்குவிக்கும் மஹாத்மா காந்தி திட்டம் எதற்காக காங்கிரஸ் கொண்டு வந்தது? உனக்கு வந்தா ரத்தம். மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை