உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் மீது பிரியங்காவுக்கு நம்பிக்கையில்லை: பாஜ

ராகுல் மீது பிரியங்காவுக்கு நம்பிக்கையில்லை: பாஜ

புதுடில்லி: காங்கிரஸ் எம்பி பிரியங்கா - ராபர்ட் வாத்ரா மகன் ரெஹான். புகைப்படம் மீது ஆர்வம் காட்டும் அவர், ராஜஸ்தானில் பிகானேர் ஹவுஸ் கட்டடத்தில் கண்காட்சி நடத்தினார். நாளை மறுநாள் வரை நடக்கும் இக்கண்காட்சியில், எஸ்ஐஆர் குறித்த மாணவர் போராட்டம் மற்றும் சில ஆர்ப்பாட்டம் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றன. இவற்றில் போராட்டக் காட்சியின் புகைப்படங்களை அகற்ற பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் அறிவுறுத்தியது. இல்லாவிட்டால் கண்காட்சி ரத்து செய்யப்படும் என எச்சரித்தது. இதனால் 74 புகைப்படங்களை அகற்றினார். இது தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்ட அறிக்கையில்,'' சர்ச்சையை உருவாக்கி தனது மகனை அறிமுகம் செய்வதே பிரியங்காவின் திட்டம். அவர் ராகுல் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்.வியட்நாம் சென்றுள்ள ஒவ்வொரு விஷயம் குறித்தும் எக்ஸ் வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வரும் ராகுல், ரெஹானுக்கு ஆதரவாக ஒரு பதிவு கூட வெளியிடவில்லை. காங்கிரசில் ராகுல் - பிரியங்கா இடையே மோதல் நீடிக்கிறது,'' எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kannan Chandran
அக் 24, 2026 01:37

ராகுலுக்கு அந்த வயதில் திருமணம் நடந்ததிருந்தால், இப்பொழுது 35 வயதில் பல குழந்தை இருந்திருக்கும், வழக்கம் போல அவர்களுக்கும் காந்தி என பெயரில் சேர்த்து கட்சியை கைப்பற்றி இருக்கலாம். இளமைகாலம் முழுவதையும் பட்டயா-வில் இழந்ததால், முதுமை காலமான இனி ராகுலை அவரது குடும்பமே ஒதுக்கும்..


வில்லிபுத்தூரான்
அக் 24, 2026 00:20

மக்கள் ஒட்டு மொத்த கான் க்ராஸ் மீது என்றோ நம்பிக்கையை இழந்துவிட்டனர்.


duruvasar
அக் 23, 2026 23:53

இன்னும் எவ்வளவு கலாம்தான் காந்தி பெயரை வைத்துக்கொண்டு நேரு குடும்பம் நாட்டை ஏமாற்றப்போகிறதோ. ? மொத்த குடும்பமும் வெத்து பீசுங்க .


ஆரூர் ரங்
அக் 23, 2026 22:10

வாரிசுப் போட்டியில் பத்திரிகை ஆபீஸ் எரிக்கப்பட்டது நினைவுக்கு வருது.


Santhakumar Srinivasalu
அக் 23, 2026 21:21

ராகுலை முற்றிலும் பிரியங்கா நம்ப தயாரில்லை?


Ganesun Iyer
அக் 23, 2026 21:00

மகன் - ரெஹான் வாத்ரா தந்தை - ராபர்ட் வாத்ரா தாய் - பிரியங்கா காந்தி ...


ராமகிருஷ்ணன் பரமக்குடி
அக் 23, 2026 20:46

பிரியங்கா மட்டுமா, காங்கிரஸ்காரர்கள், இந்திய மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்


Barakat Ali
அக் 23, 2026 20:14

Priyanka only trust her own brand of liquor for intoxication.


Ramesh Sargam
அக் 23, 2026 20:11

ராகுலா அல்லது ரெஹானா? The choice is Priyankas.