உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி

பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி

புதுடில்லி : காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை இரண்டாவது முறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து இன்று (ஏப்.,15) அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.கடந்த 2018ல் குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்ட விரோத பண பரிமாற்றம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் வட்டியில்லாமல் ரூ.65 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை ஏப்.8ல் ஒரு சம்மன் அனுப்பியது. தற்போது 2வது சம்மன் அனுப்பி உள்ளது. ஆனாலும் வாத்ரா ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் இன்று ஆஜரானார்.

இது சதி திட்டம்

முன்னதாக பேசிய ராபர்ட் வாத்ரா, ''இது எனக்கு எதிராக மத்திய அரசின் சதி திட்டம். என்னை பழிவாங்க அரசு இயந்திரத்தை ஏவி விடுகிறது. நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது'' என குற்றம் சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
ஏப் 15, 2025 18:29

இந்த ஊழல் குடும்பம் முழுவதுமாக தண்டிக்கப்பட வேண்டும்.


என்றும் இந்தியன்
ஏப் 15, 2025 16:53

ராபர்ட் வாத்ரா??எனக்கும் ரொம்ப வேணாம் ஒரு ரூ 2 கோடி கடன் வேணும் வட்டியில்லாமல் வாங்கித்தா, மாசாமாசம் பணத்தை கரெக்ட்டாக திருப்பிக்கொடுத்துவிடுவேன்


நரேந்திர பாரதி
ஏப் 15, 2025 16:51

"நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது ...சொல்றது பொய்யின்னாலும் ஒரு நியாயம் வேணாமா??


Rasheel
ஏப் 15, 2025 16:27

6 மாதத்தில் ஒரு நிலத்தின் மதிப்பு 50 கோடிக்கு மேல் போகுமானால், அந்த அளவு லாபம் தருமானால் அந்த ஜூ மந்தர காளி வித்தையை இந்தியா மக்களுக்கு கற்று கொடுக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டத்தை வைத்து கொண்டு சுற்றும் நபர்களின் கடமை. இதில் மோடி கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.


K V Ramadoss
ஏப் 15, 2025 13:09

வழக்கமான பதில்.. அரசாங்கம் சதி செய்கிறது என்று...


Ramesh Sargam
ஏப் 15, 2025 12:23

இதென்ன முதல்முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது. இதற்கு முன்பு எத்தனையோ முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள், சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நெருக்கடி எங்கிருந்து வந்தது.


P Karthikeyan
ஏப் 15, 2025 12:19

இந்த மாப்பிள்ளைகள் தொல்லை தாங்கமுடியலை


sridhar
ஏப் 15, 2025 11:57

ஊழல் செய்தால் உடனே கண்டுபிடித்து காங்கிரசுக்கு எதிராக பிஜேபி அரசு சதி செய்கிறது.


SP
ஏப் 15, 2025 11:54

இவர் என்ன மக்களுக்காக பேசினாரு? அரசியலில் இருந்து இந்த குடும்பத்தை அகற்றினால் தான் ஊழல் ஒழிப்பதற்கு ஒரே தீர்வு


hariharan
ஏப் 15, 2025 11:27

வட்டி இல்லாமல் 65 கோடி தருவாங்களா? எனக்கு வருகிற வருமானத்தில் நிறைய வரி, GST, வருமான வரி, ரயில்ல போனா வரின்னு ஏகப்பட்ட வரி கட்டுகிறேன். ஒண்ணும் கட்டுப்படி ஆகவில்லை. எஜமான், எங்க அந்த மாதிரி வட்டி இல்லாமல் கடன் கொடுப்பாங்கன்னு சொன்னீங்கன்னா எங்கள மாதிரி வரி கொடுத்தே ஓஞ்சு போனவங்களுக்கு சவுகரியமா இருக்கும். அசல கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்துறுவோம்.


முக்கிய வீடியோ