உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால்சிங் வேட்புமனு

காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால்சிங் வேட்புமனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமிர்தசரஸ்: அசாம் சிறையில் உள்ள ‛பஞ்சாப் வாரியர்ஸ் அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங், பஞ்சாப் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.பஞ்சாப் வாரியர்ஸ் என்ற அமைப்பை துவக்கி காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்தவர் அம்ரித்பால்சிங், கடந்தாண்டு தன் ஆதரவாளர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவரை மீட்பதற்காக பயங்கர ஆயுதங்கள், நவீன துப்பாக்கிகளுடன் போலீ்ஸ் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை மிரட்டி அவரை மீட்டுச்சென்றார். இதனால் பஞ்சாப் முழுதும் பதற்றம் ஏற்பட்டது.பஞ்சாப் போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பின் 2023 ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் ஏழாம் கட்டமாக ஜூன் 01-ம் தேதி நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் போட்டியிட வேண்டி தன் வழக்கறிஞர் மூலமாக வேட்புமனுவில் கையெழுதிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

rap
மே 11, 2024 09:58

SC will grant immediate bail for this terrorist for campaigning.


kannan sundaresan
மே 11, 2024 05:28

இவருடைய வேட்பு மனு ஏற்கப்படுமா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 11, 2024 15:47

கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் ஏற்காவிட்டால் சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்கு தொடுத்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்கும் மேலும் தேர்தல் ஆணையத்திடம் இந்த குறிப்பிட்ட தொகுதியின் தேர்தல் ஏன் நாங்கள் நிறுத்தி வைக்க கூடாது என கேள்வி கேட்டு தேர்தலை நிறுத்தி வைக்கும்


J.V. Iyer
மே 11, 2024 04:20

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஒரு பகுதியை காலிஸ்தானுக்கு கனடா பிரதமர் அர்பணிக்கவேண்டும் அவர்களுக்குதான் நிறைய நிலம் இருக்கிறது என்ன? சொல்வது சரிதானே? பிறகு கியூபெக் மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கவேண்டும்


தாமரை மலர்கிறது
மே 10, 2024 20:38

கெஜ்ரி வெளியே வருவதால், தீவிரவாதிகளுக்கு கொம்பு முளைக்கிறது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ