உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிலாடி நபி ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்

மிலாடி நபி ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்

ஷிவமொக்கா: கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மிலாடி நபி ஊர்வலத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவின் பத்ராவதி டவுனில், மிலாடி நபியையொட்டி நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்கள் பேரணி நடத்தினர். அப்போது, சில வாலிபர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில், பத்ராவதி சீகேபாகி பகுதியிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோ வெளியானது. இதனால், பா.ஜ., தலைவர்கள், ஹிந்து அமைப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர். 'இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தேச துரோகிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை கைது செய்ய கோரி, நேற்று மாலை ஷிவமொக்கா டவுனில் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். முன்னதாக, மிலாடி நபி பேரணி துவக்க நிகழ்ச்சியில், பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் பேசுகையில், “நான் நான்கு முறை எம்.எல்.ஏ., ஆனதற்கு முஸ்லிம் நண்பர்கள் தான் காரணம். இறுதி வரை உங்கள் குடும்பத்தின் மகனாக இருப்பேன். அடுத்த ஜென்மத்தில் முஸ்லிமாக பிறக்க ஆசைப்படுகிறேன்,” என்றார். இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதை பார்த்தால், மதமாற்றத்தை இவர்களே ஆதரிப்பது போன்று உள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

ராமகிருஷ்ணன்
செப் 10, 2025 21:41

அருமையான ஐடியா.இந்த மாதிரியான தேசவிரோதிகளை முதன்முறையாக பிடித்தால் ஓட்டு உரிமை ரத்து, இரண்டாவது முறையாக பிடிபட்டால் குடியுரிமை ரத்து என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.


spr
செப் 10, 2025 21:33

"இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தேச துரோகிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்".


சிந்தனை
செப் 10, 2025 16:45

எந்த மாவட்டத்தில் இது போன்ற தேசவிரோத கோஷங்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறதோ அந்த மாவட்ட அந்த மாவட்டத்தில் உள்ள நீதிபதிகளுக்கு தூக்கு தண்டனை என்று அறிவித்தால் நாட்டில் நிறைய குற்றங்கள் குறையும் என்று தோன்றுகிறது அனைவரும் சிந்திப்போம்...


BALAJI
செப் 10, 2025 16:42

இவனுங்களுக்கு நம்ம நாட்ல வர்ற எல்லா சலுகைகளும் அனுபவிக்கனும் ஆனால் விசுவாசம் பாகிஸ்தானுக்கு விருப்பம் இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியேறலாம்


Indian
செப் 10, 2025 13:13

முஸ்லிம்களுக்கு ஒரு தலைமையக இருந்தால் அவர்கள் குரல் கொடுக்கலாமா? அப்ப மதம் தான் முக்கியமா


Oviya vijay
செப் 10, 2025 12:44

தேசத் துரோகிகள் சிரச்சேதம் செய்ய வேண்டும்


JAGADEESANRAJAMANI
செப் 10, 2025 11:51

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் தேச துரோகிகளை அவர்கள் விரும்பும் நாட்டுக்கே அனுப்பவேண்டும்.நமது அரசுக்கு செலவுகளும் குறையும்.அங்கே அவர்களுக்கு காய்ந்த ரோட்டியும் பிறகு அவர்களின் செயலுக்கு ஏற்ப கிடைக்கும் . ஜெய் ஜவான் ஜெய்ஹிந்த் .


ram
செப் 10, 2025 11:24

majaority ஹிந்துக்கள் செலுத்தும் வரி பணம் இவர்களுக்கு சிறுபான்மை என்று, அரசு இதை நீக்கிவிடலாம். இப்போது இவர்கள் இருப்பது சதவீதத்துக்கு மேல் இருக்கிறார்கள். ஹிந்துக்களில் எவ்வளோவோ மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த அரசுகள் உதவலாமே.


Rathna
செப் 10, 2025 11:23

இங்கே வியாபாரம் செய்து இந்த நாட்டு வளத்தில் கொழுத்து பாகிஸ்தானை பாடுகிறான்? அங்கே போனால் தானே தெரியும். ஒரு வேலை சோறு இல்லாமல், வெள்ளத்திலும், பஞ்சத்திலும் வெறி கொண்ட பாக்கிஸ்தான் மக்கள் பிச்சை எடுக்கும் நிலை.


Against traitors
செப் 10, 2025 11:17

அதிர்ச்சியே கிடையாது. பாம்பு கடிப்பது நிறுத்த முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை