உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இழப்பீடு வழங்காமல் சொத்துக்களை பறிக்க முடியாது

இழப்பீடு வழங்காமல் சொத்துக்களை பறிக்க முடியாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தனி நபரின் சொத்துரிமை என்பது, அரசியலமைப்பு உரிமை. எனவே, ஒருவரின் சொத்துக்களை கையகப்படுத்தும் போது போதுமான இழப்பீடு வழங்காமல், அதை பறிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கர்நாடகாவின் பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு பெருவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம், 2003ல் முதல்கட்ட அறிக்கை வெளியிட்டது.பின், 2005ல் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் துவங்கின. ஆனால், நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்பட்டது. இந்த இழப்பீடு தொகையை பெறுவதற்காக, நில உரிமையாளர்கள் கடந்த 22 ஆண்டுகளாக நடையாய் நடக்கின்றனர்.இது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை மட்டும் அல்ல. நம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 300-ஏ விதியின் கீழ், அது அரசியலமைப்பு உரிமை.ஒருவரின் நிலத்தை கையகப்படுத்தும் போது சட்டப்படி உரிய இழப்பீடு தொகை வழங்காமல் அதை பறிக்க முடியாது.இந்த விவகாரத்தில், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை, 2019, ஏப்., 22ம் தேதி சந்தை மதிப்பில் கணக்கிட்டு, உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.இந்த தொகையை கணக்கிட்டு, புதிய இழப்பீடு தொகையை இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கும்படி நிலம் கையகப்படுத்தல் சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிடுகிறோம்.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GMM
ஜன 04, 2025 08:09

சொத்துரிமை அடிப்படை உரிமை, அரசியல் அமைப்பு உரிமை என்றால், கொடுக்கப்பட்ட உரிமையை மாற்ற, மறு விற்பனை செய்ய சட்டம் எப்படி அனுமதிக்கிறது. ? தமிழகம் முழுவதும் திராவிட நில அபகரிப்பு வியாபித்து உள்ளது. ஓட்டுரிமை, குடியுரிமை... மாற்ற, விற்க முடியாது. சொத்தும் விற்க முடியாது என்று இருக்க வேண்டும். ? இழப்பீடு வழங்க மூலபத்திரம், கிரய பதிவு பத்திரம், வரி, பட்டா, ஒருவர் பெயரில் இருக்க வேண்டும். வாரிசு சான்று தேவை. வாரிசு பங்கு விவரம் தேவை. சொத்துக்கள் பறிப்பது கிடையாது. பொது பயன்பாட்டிற்கு எடுக்க வேண்டிய நிலை வரும். சொத்து குறைந்தது 15 -20 ஆண்டுகள் ஒருவர் பெயரில் இருக்க வேண்டும். ஆவண குறைபாட்டினால், இழப்பீடு வழங்க தாமதம் ஏற்படும்.


புதிய வீடியோ