ஸ்பா என செயல்பட்ட விபச்சார கும்பல்
புதுடில்லி:தென் கிழக்கு டில்லியின் லஜ்பத்நகரில் இயங்கிய அழகு நிலையமான, 'ஸ்பா'வில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். ஒன்பது பெண்களை அந்த இடங்களில் இருந்து மீட்டுள்ளனர். வேகாஸ் ஸ்பா என்ற பெயரில், லஜ்பத் நகரில் செயல்பட்ட இரண்டு ஸ்பாக்களில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மேலாளர்கள் என்ற போர்வையில் விபச்சார புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை கைது செய்தனர். அந்த இரண்டு ஸ்பாக்களிலும் பணியாற்றிய ஒன்பது பெண்களை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். ஸ்பா எனும் அழகு நிலையம் என்ற பெயரில் செயல்பட்ட அந்த ஸ்பா, பல ஆண்டுகளாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததை அடுத்து, போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.