உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரில் விபசாரம்

மைசூரில் விபசாரம்

மைசூரு:

ஏழு பேர் கைது

மைசூரில், தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரு பெண்கள் மீட்கப்பட்டனர். முன்னாள் கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.மைசூரு - போகடி வட்டச்சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில், ஹைடெக் விபசாரம் நடப்பதாக, சரஸ்வதிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட லாட்ஜில் நேற்று முன்தினம் இரவு போலீசார், 'ரெய்டு' நடத்தினர்.அங்கிருந்த அறைகளில் சோதனையிட்ட போது, தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண் உட்பட இருவர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ரத்தன் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ரத்தன் என்பவர் கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் முன்னாள் ஊழியராவார். அப்பணியை விட்டு விட்டு, முழு நேர விபசார தொழிலில் ஈடுபட்டுள்ளார்.தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணிடம் விசாரித்த போது, வியாபார விஷயமாக ஒரு நாள் முன்பு தான் மைசூரு வந்ததாக தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏழு பேர் கைது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ