உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய அரசுக்கு எதிராக போராட்டமா? ராகுல் மீது பாய்ந்தது வழக்கு

இந்திய அரசுக்கு எதிராக போராட்டமா? ராகுல் மீது பாய்ந்தது வழக்கு

கவுகாத்தி: ' நாட்டின் ஒட்டு மொத்த அமைப்புகளையும் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கைப்பற்றிவிட்டன. தற்போது, நாம் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மட்மல்லாமல் இந்திய அரசையே எதிர்த்து போராடி வருகிறோம்,' எனக்கூறிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தலைநகர் டில்லியில், காங்கிரசின் புதிய தலைமை அலுவலகம் கடந்தசில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. 'இந்திரா பவன்' என பெயரிப்பட்ட இந்த அலுவலக திறப்பு விழாவில் ராகுல் பேசியதாவது:பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை எதிர்த்து, நாங்கள் போராடுகிறோம் என நீங்கள் நம்பினால், என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு புரியவில்லை என, அர்த்தம்.பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் நம் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றியுள்ளன. தற்போது நாங்கள், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்திய அரசையே எதிர்த்து போராடுகிறோம். இவ்வாறு அவர் பேசியிருந்தார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில், அசமை சேர்ந்த மோன்ஜித் சேத்தியா கவுகாத்தி போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: பேச்சு சுதந்திரத்திற்கு அளித்த எல்லையை மீறும் வகையில் ராலின் பேச்சு அமைந்துள்ளது. பொது அமைதிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உள்ளது.இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் எனக்கூறியதன் மூலம், மக்கள் இடையே நாசவேலையை நடவடிக்கைகளையும், கிளர்ச்சியையும் வேண்டுமென்றே தூண்டி விடுகிறார். அமைதியின்மை மற்றும் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு ஆபத்தான விஷயத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது எனக்கூறியுள்ளார்.இதனையடுத்து ராகுல் மீது பிஎன்எஸ் 152 மற்றும் 197(1)(டி) என்ற இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் என்ற பிரிவின் கீழ் கவுகாத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Karthik
ஜன 20, 2025 18:55

மிகத் தாமதமான வழக்கு.. இப்பவாச்சும் பப்புவ பத்திரமா புடிச்சி பாதுகாப்பா உள்ளே வைங்க. உங்களுக்கு புண்ணியமா... போகும்.


pmsamy
ஜன 20, 2025 12:30

ஒன்றிய அரசின் கொடுங்கோள் ஆட்சி


jayvee
ஜன 20, 2025 05:07

கணங்கள் சுயோ மோட்டோவாக எடுத்தெருக்க வேண்டியது ..பயம்


J.V. Iyer
ஜன 20, 2025 04:30

இந்த ஜார்ஜ் சோரஸ் இந்தியஅடிமைகளின் தலைவன் செய்த குற்றம் ஒன்றா, இரண்டா? மூன்று வெளிநாட்டு கடவுசீட்டு, அதான் பாஸ்போர்ட் வைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவர் எப்படி MP, மற்றும் எதிர்க்கட்சி தலைவன் ஆனார் என்பதே புரியாத புதிர். இவர் மீது போட்ட எல்லா வழக்குகளுக்கும் தண்டனை வழங்கி உடனே இவர் நாடுகடத்தப்படவேண்டும். இவர் இந்தியரே அல்ல. இவர் பேச்சிலும் இது வெளிப்படுகிறது என்பது நிதர்சனம்.


தாமரை மலர்கிறது
ஜன 19, 2025 23:01

ராகுல் சொல்வது நடந்து இருந்தால், அது பாராட்டத்தக்கதே. சீனாவை கம்யூனிஸ்ட் என்று ஒரு பார்ட்டி ஆள்வதால் தான் உலகம் மெச்சும்படி முன்னேற முடிந்தது. இந்தியாவை ஆர் எஸ் எஸ் ஆள்வது நாட்டை வல்லரசாக்கும் .


Jay
ஜன 19, 2025 22:12

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மன்னர் ஆட்சிக்கு எதிராக விழித்துக் கொண்டார்கள். அதனால் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வி முகத்தில் இருக்கிறது. பெறுகிற ஒன்று இரண்டு வெற்றிகளும் உள்ளூர் தலைவர்களை பொறுத்து அமைகிறது. அதிலும் திறமை இல்லாத தலைமையின் காரணமாக காங்கிரஸ் தள்ளாடுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மன்னராட்சி நடந்தாலும் செய்தி துறை சினிமா போன்ற ஊடகங்களை மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் சிந்திக்காமல் கட்டுப்படுத்துவதால் இங்கு திமுக வாழ்ந்து கொண்டிருக்கிறது.


Ramesh Sargam
ஜன 19, 2025 22:04

ராகுல் மீது இருக்கிற வழக்குகள் போதாதென்று மீண்டும் ஒரு வழக்கு. ஆமாம், இந்த வழக்குகளில் எல்லாம் என்று தீர்ப்பு வரும்? அதுக்குள்ள நான் போய்சேர்ந்திடுவேன்...


தமிழ்வேள்
ஜன 19, 2025 20:41

இதுகூட டீப் ஸ்டேட்-ன் இறுதி அறிவுரை போல.. இவர்-மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசுக்கு துணிவில்லை என்பார்... நடவடிக்கைகள் எடுத்தால் அடக்குமுறை என்று கூவுவார்.மிசா தே.பா சட்டம் எல்லாம் மீண்டும் தேவை..


Dharmavaan
ஜன 19, 2025 20:10

நீதியின் கேவலம் இவர் வரம்பு மீறுகிறார். சட்டத்தை மதிக்காமல் என்று திருந்தும் நீதி ...நாடு நாசமாகிறது இவரால்


Dharmavaan
ஜன 19, 2025 19:57

ராகுல்கான் வரம்பு மீறி பேசுகிறான் தேச ஒற்றுமிக்கு எதிராக அந்நிய எதிரிகளுக்கு ஆதரவாக இவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்


சமீபத்திய செய்தி