உள்நோக்கத்துடன் போராட்டம்: காங்., அமைச்சர் கண்டுபிடிப்பு
பெலகாவி; ''பஞ்சமசாலி போராட்டத்தை மற்ற கட்சிகள் உள்நோக்கத்துடன் நடத்தக்கூடாது என்பதே எனது விருப்பம்,'' என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது. முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும். பஞ்சமசாலி போராட்டத்தை மற்ற கட்சிகள் உள்நோக்கத்துடன் நடத்தக்கூடாது என்பதே எனது விருப்பம்.நான் ஒரு சமுதாயத்தின் மகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இன்று நான் அரசில் அமைச்சராகவும், பொறுப்பான பதவியையும் வகிக்கிறேன். அதனால் அரசுக்கும், சமுதாயத்துக்கும் நல்லது நடக்கட்டும்.எங்கள் அரசின் கிரஹலட்சுமி திட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட, 100 பேர், பெலகாவி சட்டசபை கூட்டத்தொடரை காண அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.