உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டில் கல் வீசி தாக்குதல்! முதல்வர் கண்டனம்

நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டில் கல் வீசி தாக்குதல்! முதல்வர் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தியேட்டரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி, நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்ற போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு, 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே விடப்பட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q5z6cvii&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது கைது நடவடிக்கை தெலங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. கைது நடவடிக்கை குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது தான் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்திருந்தார். மேலும், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார். ஆனால், முதல்வரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், ' என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்த துறையையும், அரசியல்வாதியையும் குறை சொல்ல விரும்பவில்லை,' என்று கூறினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது, கற்களை வீசி உஸ்மானியா பல்கலைகழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்து பூந்தொட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ரேவதிக்கு நீதி கேட்டும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.இதனிடையே, அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதல்வர் கண்டனம்

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ' திரை பிரபலங்கள் வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசமின்றி டிஜிபி, போலீஸ் கமிஷனர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

SVR
டிச 23, 2024 08:45

இந்த அவலங்களை அசெம்பிளியில் ஆரம்பித்து வைத்ததே அவர் தான். இப்போது முதலை கண்ணீர் வடிக்கிறார். இந்த நாட்டில் ஒருவர் நடித்த படத்தை தானே தேட்டரில் சென்று பார்பதற்கு போலீஸ் அனுமதி வேண்டுமாம். இது தான் ஜனநாயகமா? இதுதான் மொஹப்பத்கி துகான் ஆ? மக்கள் கையை ஒன்றுமில்லாமல் செய்தால் தான் இந்த நாடு உருப்படும். இல்லையென்றால் 2047 இல் இந்நாடு வல்லரசு நாடாவது கடினம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 23, 2024 07:38

பதிலுக்கு ரேவந்த் ரெட்டியின் வீட்டின் மீது எனது ரசிகர்கள் கூட்டமாக சென்று கற்கள் எறிவதை தவிர்க்கும்படி அல்லு அர்ஜுனா வேண்டிக் கொள்வதாக அறிக்கை விட்டால் என்ன ஆகும்?


N.Purushothaman
டிச 23, 2024 06:47

உலகிலேயே சினிமா பைத்தியங்களை மிஞ்ச ஆள் இல்லாத நாடு என்றால் அது இந்தியா தான். அதுவும் தென் மாநிலங்கள் மூர்க்கமான பைத்தியங்கள் அதிகம் வாழும் பகுதி ....ரேவந்த் ரெட்டி பிரச்சனையை முடிக்காமல் தூண்டிவிடும் மாதிரி பேசியது என்ன விதம்ன்னு தெரியல. இதுக்கும் உஸ்மானியா பல்கலை மாணவர் அமைப்பிற்கும் என்ன சம்மந்தம்? அவ்வளவு ரோஷம் இருக்குற அமைப்பா இருந்தால் மாணவர்கள் நிரந்தரமாக திரைப்படங்களை புறக்கணித்து எதிர்கால திட்டமிடலில் கவனம் செலுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரலாமே? அது என்ன கல் எறிவது? மத்திய மாநில அரசுகள் மாணவர் அமைப்புக்களை கண்காணிப்பில் வைப்பது நல்லது....


Narasimhan
டிச 23, 2024 06:14

I recollect Tamil saying ‘ pinching the thigh and swinging the cradle’


chennai sivakumar
டிச 23, 2024 08:07

Exactly. Your views are 100% perfect


Oru Indiyan
டிச 22, 2024 22:25

காங்கிரஸ் கட்சி குண்டர்கள் செய்த வேலை தான் இது. தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடந்த போது, நடிகர்களை கைது செய்ததா தமிழ்நாடு அரசு.


Anantharaman Srinivasan
டிச 22, 2024 21:39

அரசியல் கட்சிகளின் மாநாட்டில் விபத்து ஏற்பட்டு எத்தனை உயிர் போயுள்ளது. அவ்வளவு ஏன். சமீபத்தில் மெரீனாவில் ராணுவ விமானப்படை சாசக நிகழ்ச்சியில் உயிர் சேதம் ஏற்பட்டதே. முதல்நாள் ஷோவை பார்க்க சிறுவனை அழைத்துக் கொண்டு அந்த பெண் போனது தவறு. கூட்டம் அதிகம் என்று பார்த்த பின்னாவது திரும்பியிருக்க வேண்டும்.


ஸ்ரீதேவி
டிச 22, 2024 21:37

நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்தால் இதன் பின்னே, வேறு ஏதோ விஷயம் இருப்பது போல் தோன்றுகிறது. தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரி, இங்கு இருப்பது போல் அரசியல்வாதிகள் கையில் கிடையாது. அங்கு சினிமாவில் உள்ள ஐந்தாறு குடும்பங்களில் தான், நடிகர்களும், தியேட்டர்களும் உள்ளன. அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்தபடி சினிமாவை ஆட்டி வைக்க முடியாது. ஒருவேளை புஷ்பா படத்தின் டிஸ்ட்ரிபுசேன் கேட்டு மறுக்கப் பட்டதால் அல்லு அர்ஜூன் பலிவாங்கப் படுவதாக தோன்றுகிறது. இல்லையேல் ஒட்டு மொத்த இண்டஸ்டரீக்கும் விடுக்கப்படும் மிரட்டலாக கூட இருக்கலாம்


chennai sivakumar
டிச 23, 2024 08:08

எஸ். Unmai


V வைகுண்டேஸ்வரன்
டிச 22, 2024 21:00

நீங்கள் ஏன் புள்ள குட்டி, பொண்டாட்டியோட அந்த ஷோ வுக்கு கூட்டம் அலை மோதும் னு தெரிஞ்சுண்டே போனாய்??


ஆரூர் ரங்
டிச 22, 2024 20:54

முன்பு ஒரு மாதிரியான படங்களுக்கு பயந்த சுபாவம் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் டிக்கட் கிடையாது, என விளம்பர பலகைகள் வைத்திருப்பர். இப்போ FDFS (First day First show) மற்றும் நடிகர்கள் வருகையின் போது அது போல செய்யலாம்.


சிவம்
டிச 22, 2024 20:43

கல் வீச்சில் ஈடுபட்டது உஸ்மானியா பல்கலை மாணவ அமைப்பு. இவர்கள் பெரும்பாலும் அமைதி மார்கத்தினர். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி. ஏதாவது புரிகிறதா?


visu
டிச 22, 2024 21:40

ஹ்ம்ம்... சம்பந்தமேயில்லாமல் எதற்கு இவனுங்க போராடறாங்க மாணவர் போரவையில் ரௌடிகளா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை