உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு; கைதானவர் சிறையில் தற்கொலை!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு; கைதானவர் சிறையில் தற்கொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர், சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில், 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சிறுமி உடலை சாக்கு பையில் போட்டு, கழிவுநீர் கால்வாயில் வீசியிருந்தனர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5wk4ybuj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீசார் நடத்திய விசாரணையில், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ்,19, விவேகானந்தன்,56, ஆகியோர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நைசாக பேசி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், அவர்களை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையின் கழிவறையில் விவேகானந்தன் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. உடலை மீட்ட சிறைக் காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mohamed rafi
செப் 16, 2024 11:41

மிருகமே அவன் செய்த குற்றத்தை தெரியுமா உனக்கு ? எல்லாத்துக்கும் ஒரு கமெண்ட் இது இயற்கையோ தற்கொலையோ ஆனால் அந்த சிறுமியின் தகப்பனாக வரவிற்கிறேன்.


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 09:55

அவரே மாட்டிக்கினாரா அல்லது தொங்க உட்டாய்ங்களா ????


N.Purushothaman
செப் 16, 2024 09:33

இதுவே தமிழ்நாட்டுல நடந்திருந்தால் தற்கொலை செஞ்சிக்கிட்டவனுக்கு முப்பது லட்சம் இழப்பீடு கொடுத்திருப்பானுங்க ....


K RAGHAVAN
செப் 16, 2024 09:02

our ex governor Tamil told all she finish with 10 days she has done good job


பாமரன்
செப் 16, 2024 08:49

உண்மையில் குற்றம் இழைத்திருந்தால் இவரைப் போன்ற நபர்களுக்கு எப்பவோ வயரை கடிக்க பாத் ரூம்ல வழுக்கி விழ தப்பி ஓடும் போது புல் தடுக்கி விழ வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கனும்... இப்போது தான் துண்டு குடுத்திருக்காய்ங்க போல.. வழக்கு நடத்துவது வீன் வேலை... . என்ன ஒன்னு சம்பந்தமில்லாம சில பகோடாஸ் டீம்காவை திட்டும் வாய்ப்பு இல்லாமல் போயிடிச்சு...


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 09:56

தொட்டு கும்பிடாமே இருக்க முடியாது போல .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை