உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு தொகுதியை கைவிடுகிறார் ராகுல்: பிரியங்காவை களமிறக்க முடிவு

வயநாடு தொகுதியை கைவிடுகிறார் ராகுல்: பிரியங்காவை களமிறக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அங்கு பிரியங்காவை களமிறக்க காங்.,முடிவு செய்துதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்த முடிந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் ராகுல், உபி. ரேபரேலியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில் எந்த தொகுதியை கைவிடுவது என்ற குழப்பத்திற்கிடையே இன்று வெளியான தகவலில், கேரளாவில் வயநாடு லோக்சபா தொகுதியை கைவிடுவது எனவும், ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடரவும் வயநாடு எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரியங்கா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுலுடன் இணைந்து தீவிர பிரசரராம் செய்தார். தற்போது முதல்முறையாக வயநாடு தொகுதி எம்.பி.,பதவிக்கு போட்டியிடுகிறார்.கார்கே கூறியதாவது: வயநாடு தொகுதியை நாங்கள் கைவிடவில்லை என்பதை தொகுதி மக்களுக்கு தெரிவிக்கவே பிரியங்கா அங்கு போட்டியிடுகிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.ராகுல் கூறியதாவது: கடினமான நேரங்களில் எனக்கு துணை நின்றவர்கள் வயநாடு தொகுதி மக்கள். பிரியங்கா வெற்றி பெறும் போது இரண்டு எம்.பி.,க்கள் அங்கு இருப்பார்கள். வயநாடு,ரேபரேலி இரு தொகுதிகளும் எனக்கு இதய பூர்வமான தொடர்பு இருக்கிறது. வயநாடு தொகுதியில் நான் வாக்குறுதி அளித்ததை நிச்சயம் நிறைவேற்றுவேன் இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 18, 2024 11:57

ராகுலை வாக்களித்த இஸ்லாமிய மக்களுக்கு அவமானம் .......


kulandai kannan
ஜூன் 18, 2024 08:48

நேரு குடும்ப அதிகார வெறியின் உச்சக்கட்டம். கம்யூனிஸ்டுகளின் மௌனம் ஏன்?


பேசும் தமிழன்
ஜூன் 18, 2024 08:41

பப்பு.... மக்களின் வரிபணத்தை வீணடிக்க கூடாது என்று... ஊருக்கு தான் உபதேசம் போல... இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால்.... அதற்க்கான செலவை யார் ஏற்பது.... மக்களின் வரிப்பணம் தானே வீணாகி வருகிறது..... கேரளா மக்கள் கான் கிராஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 18, 2024 06:37

பிரியங்காவின் தேர்தல் வாக்குறுதி என்னவாக இருக்கும். வீட்டிற்கு ஆண்டுக்கு 1 லட்சம் என்று 5 வருடபணம் 5 லட்சம் மொத்தமாய் தேர்தல் முடிந்த பிறகு தருவதாக பத்திரம் தரப் போகிறார்.


sankaranarayanan
ஜூன் 18, 2024 05:56

வயநாட்டில் பிரியங்கா ரெய்பரேலியில் பப்பு ராஜ்ய சபையில் அம்மையார் நன்றாக இருக்கிறது நாடு ஏன் பாரதத்தில் அரசியலுக்கு வருவதற்கு கான் கிராஸில் வேறு யாருமே இல்லையா? குடும்பமே அரசு


Nagercoil Suresh
ஜூன் 18, 2024 04:11

காங்கிரஸ் கட்சி இந்த நூற்றாண்டில் எடுத்த அறிவிப்பூரமான முடிவில் இதுவும் ஒன்று, சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் போல் தெரிகிறது, வரும் தேர்தல்களில் இதன் தாக்கம் எதிரொலிக்கும்... அரசியலில் முதிர்ச்சி தேவை , தேர்தல் கூட்டணி கணிப்புகள், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கவனம் செலுத்துதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அனைத்திலும் பிரியங்கா தேர்ச்சி பெற்றால் காங்கிரஸ் கட்சி வரும் காலங்களில் படிப்படியாக எழுந்து நிற்க அதிக வாய்ப்புள்ளது... விதி வலியது அதை யாராலும் மாத்த முடியாது என்பது முன்னோர்கள் கருத்து ....


ckm
ஜூன் 18, 2024 00:44

தோத்து போய்ட்டு இத்தாலிக் ஓடு


எவர்கிங்
ஜூன் 17, 2024 23:55

இதுவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர்கள் எல்லோரும் உத்திரபிரதேசம் என்ற எழுதப்படாத விதி அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஏற்பாடு


Saai Sundharamurthy AVK
ஜூன் 17, 2024 22:10

நாடே 99 தொகுதிகளுடன் காங்கிரஸை கை விட்ட பிறகு வயநாடை கை விட்டால் என்ன ! தக்க வைத்துக் கொண்டால் என்ன !!!


Ramesh Sargam, Back in Bengaluru l….
ஜூன் 17, 2024 22:00

Priyanka should win in Wayanad.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ