உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் ஒருவழியாக பீஹார் வந்தார் ராகுல்

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் ஒருவழியாக பீஹார் வந்தார் ராகுல்

பீஹார் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும் சூழலில், அந்த பக்கமே தலை காட்டாத ராகுல், இரு மாதங்களுக்கு பின், ஒருவழியாக நேற்று பிரசாரத்திற்காக வந்து சேர்ந்தார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம் மாநில சட்ட சபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்ட தேர்தல் வரும் நவ., 6ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதையொட்டி, லாலு வின் ஆர்.ஜே.டி., எனப் படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது .தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக காங்., - எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பீஹார் முழுதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார்.கடைசியாக செப்., 1ம் தேதி பீஹாரில் இருந்த அவர், அதற்கு பின் பீஹார் பக்கமே தலை காட்டவில்லை.சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் சூடு பிடித்த நிலையில், கடந்த 25ம் தேதி தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, சமஸ்திபூரில் பிரசாரம் செய்தார்.அதற்கு பிறகாவது ராகுல், பீஹார் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் செல்லவில்லை. இந்தச் சூழலில் கடந்த 59 நாட்களாக காணவில்லலை பீஹார் பக்கமே ராகுல் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பீஹார் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும் சூழலில், ஒரு வழியாக ராகுல் நேற்று பீஹார் வந்து சேர்ந்தார். முஸாப்பூர் மற்றும் தர்பங்காவில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் பிரசாரத்தில் இறங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ஓட்டுக்காக பிரதமர் மோடி எந்தவிதமான நாடகத்தையும் அரங்கிற்றுவார். நடனம் ஆடினால் தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று கூறி பாருங்கள். உடனடியாக அவர் பரத நாட்டியமே ஆடுவார்.பீஷாரில் முதல்வர் நிதிஷகுமார் தலைமையில் ஆட்சி நடப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை பாஜ., உருவாக்கி இருக்கிறது. உண்மையில் அவரை வைத்து, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் பாஜ., தான் ஆட்சி நடத்தி வருகிறது. நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாததால், மக்கள் அனைவரும், 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' லேயே மூழ்கி கிடக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காகவே, தொலை தொடர்பு துறையை ஒரு நிறுவனத்தின் வசமே அவர் வைத்து இருக்கிறார். இவ்வாறு ராகுல் பேசினார். 'ரவுடியை போல பேசுகிறார்' ராகுல் மீது பா.ஜ., பாய்ச்சல் ராகுல் பேச்சு குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி நேற்று கூறியதாவது: உள்ளூர் பேட்டை ரவுடி பேசினால், எப்படி இருக்குமோ, அதுபோல இருக்கிறது ராகுலின் பேச்சு. ரவுடியைப் போல பேசி, பிரதமரை இழிவுபடுத்தி பார்க்கும் ராகுலின் இத்தகைய அணுகுமுறை ஏற்புடையதல்ல; கண்டனத்திற்குரியது. பிரதமரை கிண்டல் செய்வதாக நினைத்து, ஓட்டு போடும் மக்களையும், நாட்டின் ஜனநாயகத்தையும் ராகுல் இழிவுபடுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.-நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ellar
அக் 30, 2025 21:05

நன்றி திரு ராகுல் அ. மக்கள் விருப்பத்திற்கு பாஜக பிரதமரே ஆடுவார் என மக்களுக்கு கூறியுள்ளீர்கள்.... உங்கள் கட்சி ஆடாது அசையாது... மக்களுக்கு.... ஆ. ஆட்சியை நேரடியாகவோ ரிமோட்டிலேயோ நடக்கிறது என்ற உண்மையை ஒதுதுக் கொண்டதற்கு.... இண்டி அங்கு ஆட்சி நடக்கவில்லை என்றல்லவா இதுவரை பிரசாரம் செய்து கொண்டிருந்தது? இ. தொலை தொடர்பு துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல்லை முளையில் இருந்து காங்கிரஸ் கட்சி காப்பாற்றி வளர்த்தி விட்ட நன்றி கடனை இப்போது நீங்களே சொல்லி காட்டுவதற்கு நன்றி... ஆனால் பாஜக வந்ததினால் பிஎஸ்என்எல் இன்னமும் உயிருடன் உள்ளது என்பது உங்களுக்கு உறுத்தலாக இருக்கும் என நினைக்கிறேன்.


HoneyBee
அக் 30, 2025 16:13

அப்ப கட்டாயம் பீகாரில் பாஜக வென்று விடும். ஏன் என்றால் பப்பு என்ற பாஜக நட்சத்திர பேச்சாளர் வந்துட்டாரு...பாஜக


pakalavan
அக் 30, 2025 10:20

பின்ன.......


D Natarajan
அக் 30, 2025 09:57

பிஹாரில் ராகுல் பிரச்சாரம் , பிஜேபி வெற்றி நிச்சயம்


angbu ganesh
அக் 30, 2025 09:28

வரமே இருக்கறதே சிறப்பு


duruvasar
அக் 30, 2025 09:25

இனிமே வந்தால் என்ன வராட்டி என்ன ?


VENKATASUBRAMANIAN
அக் 30, 2025 08:12

இவர்தான் பாஜகவின் பலம். வாழ்க ராகுல்


சசிக்குமார் திருப்பூர்
அக் 30, 2025 08:08

தேர்தலுக்கு ஆறு நாட்கள் இப்போது வந்து பிஜேபி கூட்டணி ஜெயிக்க ஓட்டு கேட்கிறார்


Priyan Vadanad
அக் 30, 2025 07:06

அரசியலில் கிண்டல் கேலி நையாண்டி எல்லாமே சகஜம்தானே. விதவிதமான கெட்டப்பில் ஒருவர் வந்தால் முதலில் ரசிக்கலாம். அதுவே தொடர்ந்தால் கிண்டல் கேலி நையாண்டி இவைகளை சந்திக்க வேண்டியதுதான். இதையெல்லாம் பொருட்ப்படுத்தாமல் செயல்படுவதுதான் உண்மையான அரசியல்வாதிக்கு அழகு.


Venugopal, S
அக் 30, 2025 09:00

ஊசிப் போன வடை


Senthoora
அக் 30, 2025 13:32

என்னதான் இருந்தாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் சிரிப்பார்கள்


Priyan Vadanad
அக் 30, 2025 07:01

அவருடைய ராசி மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.