உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்

சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காத லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில், ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்கவில்லை. இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த தியாகிகளின் வீரத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்திருப்பதை பாஜவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து பாஜ செய்தித்தொடர்பாளர் ஷெஷாத் பூனவாலா வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'ஒட்டுமொத்த நாட்டின் கொண்டாட்டத்தை பாகிஸ்தான் விரும்பி ராகுல் புறக்கணித்திருப்பது வருத்தமானது. இது மோசமான நடத்தை. இதுதான் இந்திய அரசியலமைப்புக்கும், ராணுவத்திற்கும் கொடுக்கும் மரியாதையா?' என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி சார்பில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் ராகுலும், மல்லிகார்ஜூன கார்கேவும் கொட்டும் மழையிலும் பங்கேற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Madras Madra
ஆக 16, 2025 12:35

இவர் தன்னை எப்போது ஒரு இந்தியராக உணர்வார் ? நாட்டின் சாப கேடு


பேசும் தமிழன்
ஆக 16, 2025 07:55

பப்பு பாகிஸ்தான் அனுதாபி என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்..... அவரது எண்ணம் முழுவதும்.... பாகிஸ்தான்.... சீனா.... இத்தாலி மட்டுமெ உள்ளது..... இந்தியா கண்டிப்பாக இல்லை.


R.RAMACHANDRAN
ஆக 16, 2025 07:41

இந்த நாட்டில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி அரசமைப்பு நாளில் அரசமைப்பு நூலை வணங்கி விட்டால் அதுதான் தேச பக்தி என நாடகமாடுகின்றனர்.இந்த நாட்டில் குற்றங்கள் செய்பவர்களுக்குத் தான் சுதந்திரம் மற்றும் அரசமைப்பு நூல் என்றாகி விட்டது.நேர்மையானவர்களுக்கு சுதந்திரமும் இல்லை அரசமைப்பு நூலால் பாதுகாப்பும் இல்லை.


Shivakumar
ஆக 16, 2025 03:47

உச்சநீதி மன்றம் ராகுலை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேட்டது சரிதான் என்று மீண்டும் நிரூபித்து இருக்கின்றார். இனிமேல் இவரிடம் தேசபற்றை எதிர்பார்ப்பது முட்டாள்த தனம்.


முருகன்
ஆக 16, 2025 06:21

கொட்டும் மழையில் காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய ராகுல் என கடைசியாக ஒரு வரி உள்ளது உனக்கு படிக்க முடிய வில்லையா எதற்கு எடுத்தாலும் பாகிஸ்தான் தேசப்பற்று என்று பாடம் எடுப்பது ஏன்


பேசும் தமிழன்
ஆக 16, 2025 07:57

நாட்டின் எதிர்கட்சி தலைவர் எங்கே சுதந்திர தின விழா கொண்டாட வேண்டுமோ அங்கே தான் கொண்டாட வேண்டும்.... அதை விடுத்து வீட்டிற்குள் கொண்டாடினார் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது !!!


ManiMurugan Murugan
ஆக 16, 2025 00:50

அயர்லாந்துவாரிச திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக தி மு கா கூட்டணி எப்படி இருக்கும் அரைகுறை அரைவேக்காடாக தான் இருக்கும்


வாய்மையே வெல்லும்
ஆக 15, 2025 23:23

அதெப்படி ராஜீவ் சாகும்போது ஒரு காங்கிரஸ் ஆளும் கூட இல்ல அரசியல் கூட்டத்தில்? அப்பவே பாக்கிஸ்தான் விரும்பிகள் சதித்திட்டம் தீட்டியாச்சு போல. அதே மாதிரி இன்றும் ஜெயலலிதா வின் மரணம் புரியாத புதிர். இதெல்லாம் கடந்து தான் நாம் அரசியல் வாழ்க்கை வாழுறோம். சுதந்திரம் கிடைத்தும் அரசியல் தலைவர்கள் தரித்திரமாக மக்கள் சேவையை மறந்து கொள்ளையடிப்பதே முழுநேர தொழிலாக உள்ளார்கள் என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று


Ramesh Sargam
ஆக 15, 2025 20:39

ராகுல், தான் ஒரு இந்திய தேசதுரோகி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அப்படியாவது அவர் ஏன் நம் நாட்டில் தொடர்ந்து வாழ ஆசைப்படுகிறார் என்றால், இங்கு என்னதான் தேசதுரோக செயல்கள் செய்தாலும் நீதிமன்றமோ, காவல்துறையோ தண்டிக்காது. இதே குற்றங்களை வேறு ஒரு நாட்டில் செய்திருந்தால், இந்நேரம் ராகுல் வசித்துக்கொண்டிருக்கிய இடம் அந்நாட்டு சிறைச்சாலை.


Parthasrathi
ஆக 15, 2025 20:12

ஆகஸ்ட் 14 தான் ராகுல் கண்ட சுதந்திர தினம்


V RAMASWAMY
ஆக 15, 2025 19:40

ஏதோ இவர் தான் தேசப்பற்றுடைய எதிர்க்கட்சி தலைவர் என்பது போல் பார்லிமென்டில் தேவையற்ற பொய்களைஅவிழ்த்துவிடும் இவர் காட்டும் தேசப்பற்று இவ்வளவு தானா? புரிந்துகொள்ளுங்கள் எல்லோரும்.


SUBBU,MADURAI
ஆக 15, 2025 19:06

29 Naxal hit villages in Chhattisgarh hoist the Tricolour for the first time since Independence. Red terror fades, the saffron white green rises.


முக்கிய வீடியோ