உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமிர்தசரஸ் சிறுவனுக்கு சைக்கிள் வழங்கிய ராகுல்

அமிர்தசரஸ் சிறுவனுக்கு சைக்கிள் வழங்கிய ராகுல்

சண்டிகர்:பஞ்சாபில் வெள்ளத்தில் சேதம் அடைந்த சைக்கிளைக் காட்டி அழுத சிறுவனுக்கு, காங்., தலைவர் ராகுல் சார்பில் புதிய சைக்கிள் வழங்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., மூத்த தலைவருமான ராகுல் சமீபத்தில் பார்வையிட்டார். அமிர்தசரஸ் மாவட்டம் கோனேவால் கிராமத்தில் வசிக்கும் அமிர்தபால் என்ற சிறுவன், வெள்ளத்தில் தன் சைக்கிள் சேதம் அடைந்து விட்டதைக் காட்டி கதறி அழுதான். சிறுவன் அமிர்தபாலுக்கு ஆறுதல் கூறிய ராகுல், புதிய சைக்கிள் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். அதன்படி, ராகுல் ஏற்பாட்டில் அமிர்தபாலுக்கு புதிய சைக்கிளை காங்., நிர்வாகிகள் வழங்கினர். சைக்கிளைப் பெற்றுக் கொண்ட அமிர்தபாலும், அவனது தந்தை ரவிதாஸ் சிங்கும் ராகுலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ