உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பு

பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்த ராகுலின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.பீஹாரில் தேர்தல் பிரசாரத்தில், சாத் பண்டிகை மற்றும் பிரதமர் மோடியை ராகுல் கடுமையாக சாடினார். அவர் 'ஓட்டுகளுக்காக பிரதமர் மோடி எதையும் செய்வார். பீஹாரில் நிதிஷ் குமார் அரசு பாஜ ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடக்கிறது என குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி குறித்த ராகுலின் கருத்துக்கு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hx3dcaoq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீஹார் புனித பூமியிலிருந்து, நாட்டுப்புற நம்பிக்கையின் மாபெரும் திருவிழாவான சாத் பண்டிகையை ராகுல் அவமதித்து இருப்பது, லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறது. சனாதன கலாசாரத்தின் மீதான அவரது வெறுப்பை பிரதிபலிக்கிறது.பிரதமர் மோடி மீது காங்கிரஸின் வெறுப்பையும், விரக்தியையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் விரட்டி மற்றும் தோல்வி பயத்தால் ராகுல் இவ்வாறு பேசி வருகிறார். பிரதமர் மற்றும் அவரது மரியாதைக்குரிய தாய்க்கு எதிராக முன்பு அநாகரீகமாக காங்கிரஸ் கட்சியினர் பேசியிருந்தனர்.ராகுல், தேஜஸ்வி யாதவ் மற்றும் அவர்களது மகா கூட்டணி எப்போதும் பீஹாரின் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் லட்சியங்களை தகர்த்தெறிந்து, காட்டாச்சி ராஜ்யத்தை ஊக்குவித்து வருகின்றன. இன்று, தோல்வியின் விரக்தியால் ராகுல் இத்தகைய அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்பது தெளிவாகிறது. இருப்பினும், பீஹார் மக்கள் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை விரும்புகிறார்கள். உறவினர்களுக்கு ஆதரவான அரசியல் அல்ல. பிரதமர் குறித்த கருத்துக்கு ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Abdul Rahim
அக் 30, 2025 15:01

மன்னிப்பு கடிதம் எழுதுவாரா ???


திகழ் ஓவியன் AJAX ONTARIO
அக் 30, 2025 09:08

மெத்த படித்த ஒரு பிரதமரய் தலையாட்டி பொம்மை யாக 10 வருடங்களுக்கு வைத்து இருந்த கேவலம்...


baala
அக் 30, 2025 09:04

அது உங்களின் வழக்கம்.


அப்பாவி
அக் 30, 2025 08:05

மன்னிப்பு வாங்கிக் குடுக்க ஆளாளுக்கு போட்டி. தேவைன்னா அவரே கேட்டு வாங்கிக்க மாட்டாரா?


Kasimani Baskaran
அக் 30, 2025 04:09

முற்றி விட்டபின் வேறு ஒன்று செய்ய முடியாது.


Nathan
அக் 29, 2025 23:19

அப்போ நீங்கள் அமெரிக்க கைக்கூலி ஆகிவிட்டது உன்மையான ராகுல். உன்மையில் உங்களுக்கு இந்திராகாந்தியின் ரத்தம் உடம்பில் ஓடுகிறதா இல்லை வெளியேறி விட்டதா


nagendhiran
அக் 29, 2025 23:10

மனநலம் பாதிக்கபட்டவர் பேசினால் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை அதான் பப்பு தப்பித்துவிடுகிறான்?


Priyan Vadanad
அக் 29, 2025 23:09

அதிமுகவையும் தவேகவையும் பாவக்காதான் ஆட்டுவிக்கிறது என்றுகூட பரவலான பேச்சு இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. தர்மேந்திரபிரதான் நமது பெருமைமிகு பிரதமருடன் இன்னும் கொஞ்சம் நெருங்கலாம் என்று பிளான் போடுகிறாரோ இருநூறு ருபாய் பங்காளிகள் வருக.


Priyan Vadanad
அக் 29, 2025 23:04

அரசியலில் ஏனய்யா மதத்தை கலக்குகிறீர்கள்? விழாவுக்கும் ராகுல் பேசியதுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே


vivek
அக் 30, 2025 05:49

இங்கும் கல்யாணம் நடக்கும் இடம் எல்லாம் திராவிட அரசியல் தானே பேசப்படுகிறது அறிவிலி


ராஜேந்திரன்,அரியலூர்
அக் 30, 2025 07:13

இதை மதம்மாறிய நீங்க சொல்லக் கூடாது.


தலைவன்
அக் 30, 2025 15:07

என்னத்த கலந்தாலும் அயோத்தியிலேயே வெல்ல முடியாத இந்த கட்சி கூடாரம் காலியாவது உறுதி??


முக்கிய வீடியோ