உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுக்கு நோபல் பரிசு வேணும்! காங்கிரஸ் போடுகிறது துண்டு

ராகுலுக்கு நோபல் பரிசு வேணும்! காங்கிரஸ் போடுகிறது துண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயக போராளியுமான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'காங்., - எம்.பி., ராகுலும் ஜனநாயகத்துக்காக போராடி வருகிறார். அவரும் நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர் தான்' என, காங்கிரஸ் கட்சியினர் வக்காலத்து வாங்கி உள்ளனர். உலக நாடுகளில் அதிக போர்களை நிறுத்திய சாதனைக்காக, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம்பிடித்து வந்தார். அவருக்கு பாகிஸ்தானும் ஆதரவாக துதி பாடியது. டிரம்பின் இந்த ஆசையில் மண் விழுந்தது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென் அமெரிக்க நாடான வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், சமூக ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டிரம்ப் வரிசையில், தங்களது தலைவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என காங்., செய்தி தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் குரல் கொடுத்து இருக்கிறார். சமூக வலைதளத்தில், ஒருபுறம் மரியாவின் புகைப்படத்தையும், மறுபுறம் ராகுலின் புகைப்படத்தையும் பதிவிட்டு, அவர் இந்த கருத்தை முன்வைத்திருக்கிறார். இது குறித்து சுரேந்திர ராஜ்புத் கூறியதாவது: அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி அவருக்கும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajan A
அக் 12, 2025 06:13

என்னதான் இருந்தாலும் தலைவரை இவ்வளவு கிண்டலடிக்க கூடாது. இதுவும் புரியாத பப்பு புளகாங்கிதம் அடைவார். இந்தியா 2014க்கு முன் ஏன் அப்படி இருந்தது என்று புரிந்து விட்டது. அப்படியே மாடலுக்கு ஒரு பல் பார்சல்னு குரல் கேட்கிறது


பா மாதவன்
அக் 12, 2025 06:01

ஏங்க.... அப்ப எங்க ஊரு மாவாட்ட ஒன்றிய முதல்வர் பெயரையும் சேருங்கப்பா... பார்த்து ஏதாவது சேர்த்து கூட்டி கொடுப்பாரு... நல்ல தீர்மானம் நிறைய போட்டிருக்காரு... வாயிலயே நிறைய வடை சுட்ட அனுபவம் ஜாஸ்தியா இருப்பது +.


Priyan Vadanad
அக் 12, 2025 06:00

அரசியல் அமைப்பை காப்பாற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் நலனுக்கு ஏதாவது ஒரு திட்டம் திரு ராகுலிடம் உண்டா? ரபேல் ரபேல் என்றும், அதானி அம்பானி என்றும், அரசியலமைப்பு அரசியலமைப்பு என்றும் வியாபாரம் ஆகாத விஷயங்களை கூவிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? சாதாரண மக்களின் குரலாக செயல்படாத எவரும் உயர் பதவிக்கும் உயர் கவுரவத்துக்கும் பொருத்தமற்றவர்களே.


Indhuindian
அக் 12, 2025 05:59

எதுக்கு துண்ட போடணும். பக்கத்துலே இருக்கற நாச்சியப்பன் பாத்திர கடையிலே போயி ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிக்குடுக்கவேண்டியதானே. இதுக்கு முன்னாடி இங்கே ஒருத்தருக்கு யுனெஸ்கோ அவாட் குடுத்தாங்களே அந்த மாதிரி, அவருக்கு ஆக் ஸ்போர்டுல் போட்டோ தொறக்கலையா அந்த மாதிரிதான்


சூரியா
அக் 12, 2025 05:51

இவனுகளுக்கெல்லாம் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமே கிடையாதா? நோபிள் பரிசின் மதிப்பைக் கெடுக்க நினைக்கிறார்கள்!


Kasimani Baskaran
அக் 12, 2025 05:42

அடப்பாவிகளா... வின்சியை இப்படியா வைத்துச்செய்வது?


kannan
அக் 12, 2025 05:37

முதலில் உலகம் சுற்றும் கணித மேதைக்குக் கொடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி