உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் கேட்டறிந்தார் ராகுல்

ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் கேட்டறிந்தார் ராகுல்

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் நேற்று நேரில் ஆய்வு செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவரிடம் நிலைமை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேட்டறிந்தார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பாதியில் முடித்து கொண்டு நாடு திரும்பினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஹல்காமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சம்பவம் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இதனிடையே, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து காஷ்மீரில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. மேலும், பஹல்காமில் இருக்கும் உள்ளூர் டாக்ஸி டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். பாரமுல்லா, ஸ்ரீநகர், பூஞ்ச், குப்வாரா பகுதிகளிலும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. அதேபோல, பஜ்ரங் தள் ஆதரவாளர்கள், இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேட்டறிந்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸ் தலைவர் தரிக் காரா ஆகியோரிடமும் நிலைமை குறித்து கேட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பதாக ராகுல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ராமகிருஷ்ணன்
ஏப் 23, 2025 15:15

இப்ப வெளிநாட்டுக்கு போயி பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் டூரிஸ்ட்களை சுட்டுக் கொன்றது பற்றி பேசு பார்ப்போம்.


Sampath
ஏப் 23, 2025 13:20

தயவு செய்து நம்ப வேண்டாம். எல்லா விஷயங்களயும் வாங்கி கொடுக்க வேண்டிய இடத்துக்கு கொடுத்து விடுவான்.


Rengaraj
ஏப் 23, 2025 12:57

டாஸ்மாக் சம்பந்தமாக தீர்ப்பு வந்தபின் ஸ்டாலின் மத்திய அரசுக்கு துணை நிற்போம் என்று சொல்றார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன் வந்தபின் இங்கே ராகுல் காஷ்மீர் நிலவரம் பற்றி அமித்ஷாவிடம் கேட்கிறார். எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது.


Ramesh Sargam
ஏப் 23, 2025 12:57

கேட்டறிந்து என்ன செய்யப்போகிறார் ராகுல். பாக்கிஸ்தான் சென்று அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு கண்டனம் தெரிவிப்பாரா?


M Ramachandran
ஏப் 23, 2025 12:50

இதை வைத்து குட்ட குழப்பம் செய்ய யாரு அறியாமல் அயல்நாடு பயணம் சென்று அறிவுரை கேட்டு பிறகு குழப்பம் செய்ய திட்டமா? தற்சமயம் தீவிர வாதிகளுக்கு ஆதரவாக பேசினால் மக்களின் கடும்கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தயக்கமா? உங்க கையாள் ஜோசப் விஜயும் கமால் ஹாசன் நும் இருப்பதால் தமிழ்நாட்டை பற்றி அவர்கள் உங்க சார்பாகா பேசுவார்கள்


M S RAGHUNATHAN
ஏப் 23, 2025 11:41

இம்மாதிரி நிகழ்வுகளுக்கு காரணம் இவர் குடும்பத்தினர் தான். நாட்டின் பிரிவினை போது அண்ணல் அம்பேத்கர் இரண்டு நாடுகளும் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப் படுவதால் மக்கள்கள் பரிமாற்றம் Total exchange of population இருக்க வேண்டும் என்று வாதாடினார். நேரு அதை ஏற்க மறுத்தது நம் நாட்டிற்கு சாபக் கேடாய் ஆகிவிட்டது.


Madras Madra
ஏப் 23, 2025 11:40

வெளி நாடுகளில் நாட்டுக்கு எதிராக பேசுவது இப்போ நல்லவன் போல நடிப்பது இவரை முதலில் கைது செய்ய வேண்டும்


Sathya
ஏப் 23, 2025 11:39

crocodile tears by him and his party congress.


GoK
ஏப் 23, 2025 11:39

இவன் ஒரு விஷக்கிருமி. இந்தியர்கள் இவனை, இவன் குடும்பத்தாரை இனம்கண்டு இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். 2029 மிக தூரம்.


Rajarajan
ஏப் 23, 2025 11:25

இப்பேற்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு வாக்களித்தால், நமக்கும் நாளை இந்த நிலைமையே. பக்கத்து வீட்டில் தீ பிடித்தால் நமக்கென்ன என்று இருந்தால், நாளை அந்த தீ நம் வீட்டிற்கும் பரவும்.


புதிய வீடியோ