உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரட்டை வேடம் போடும் ராகுல்: ஸ்மிருதி இரானி தாக்கு

இரட்டை வேடம் போடும் ராகுல்: ஸ்மிருதி இரானி தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராகுல் இரட்டை வேடம் போடுகிறார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அவர், தெலுங்கானா சென்றால், கெஜ்ரிவால் ஊழல்வாதி என குற்றம்சாட்டுகிறார்'' என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே விஷயத்தில் பகடையை ராகுல் பல்வேறு வகைகளில் உருட்டுகிறார். 2023 ஜூலை 2 ல் தெலுங்கானாவில் அவர் பேசும் போது, சந்திரசேகர ராவ் ஊழல்வாதி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்துள்ளது. அனைவருக்கும் தெரியும் என்றார்.ஆம் ஆத்மி ஊழல் பணத்தை வைத்து கோவாவில் காங்கிரசை தோற்கடித்தது. யார் உண்மையை சொல்கிறார்கள்.தெலுங்கானா சட்டசபை தேர்தலின் போது, பாஜ.,வுடன் பிஆர்எஸ் கட்சி நெருங்கிய உறவு வைத்துள்ளது. டில்லி மதுபான கொள்கை விவகாரத்தில் நடந்த ஊழலில் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு தொடர்பு உள்ளது. இரு கட்சி உறவு காரணமாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டி டில்லி போலீசுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது.அரசியல் சாசனப் பதவியில் அமர்ந்து நேர்மையை மேற்கோள் காட்டுபவர் கெஜ்ரிவாலின் செயல்களால் நிர்வாக இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழலை எப்படி வரையறுத்தார் என்ற விவரம் இன்று நமக்குக் கிடைத்து உள்ளது.ராகுலின் உண்மையான முகம் எது? தெலுங்கானாவில் பேசியது உண்மையான முகமா? டில்லியில் பேசியது உண்மையான முகமா? இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
மார் 23, 2024 19:33

உன் தலைமை மோடி ஜெயலலிதாவை Most ஊழல் அரசியல்வாதி என்று சொன்னவர்தான் சென்றமாதம் வந்தபோது அப்படியே பிளேட்டை மாற்றி ஜெயலலிதாவைப்போல் நேர்மையான பெண்மணியில்லையென்று ஓட்டுக்காக புகழ்ந்து தள்ளினார்


Arachi
மார் 23, 2024 17:44

மக்கள் மாக்களல்ல யாரு இரட்டை அல்லது பல வேடங்களில் வருகிறார்கள் அல்லது நடிக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும்


மேலும் செய்திகள்