புதுடில்லி: “இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகப்பெரிய ஆபத்து,” என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனநாயகம் அங்குள்ள இ.ஐ.ஏ., பல்கலையில், மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், மத்திய பா.ஜ., அரசை விமர்சித்தார். மாணவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: இந்திய கட்டமைப்புக்குள் சில குறைபாடுகள் உள்ளன. அதிலிருந்து வெளியே வர அபாயங்களும் உள்ளன. மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். இந்தியா என்பது பல மதங்கள், மரபுகள், மொழிகள் மற்றும் கருத்துகளை கொண்ட நாடு. அதன் ஜனநாயக அமைப்பு, அனைவருக்குமான இடத்தை வழங்குகிறது. ஆனால் தற்போது, அந்த ஜனநாயக அமைப்பின் மீதே மொத்தமாக தாக்குதல் நடத்தப்படுகிறது. மற்றொரு ஆபத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான பிளவு. இந்தியாவில் பல மொழிகள், பல மதங்கள் உள்ளன. சர்வாதிகாரம் இந்த வெவ்வேறு மரபுகள் செழிக்க அனுமதிப்பது, அவை தங்களை வெளிப்படுத்திக் கொள்ள இடம் கொடுப்பது மிகவும் முக்கியம். சீனாவைப் போல மக்களை ஒடுக்கி, ஒரு சர்வாதிகார அமைப்பை இந்தியாவால் நடத்த முடியாது. அதை ஜனநாயகம் ஏற்காது. இவ்வாறு அவர் பேசினார்.
மீண்டும் ஒருமுறை!
இந்தியாவை, வெளிநாட்டில் மீண்டும் ஒருமுறை ராகுல் இழிவுபடுத்தி உள்ளார். நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசும் அவர், மத்திய அரசுடன் சண்டையிட விரும்புகிறார். நம் விவகாரங்களில் அமெரிக்கா, பிரிட்டன் தலையிட வேண்டும் என, அவர் கோருகிறார். ராணுவம், நீதித்துறை, அரசியலமைப்பு, சனாதனம் என அனைத்தையும் அவர் விமர்சித்துள்ளார். - செஷாத் பூனாவாலா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,