உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் எதிர்மறை சிந்தனை தவறு என நிரூபணம்; அமைச்சர் பியூஷ் கோயல்

ராகுலின் எதிர்மறை சிந்தனை தவறு என நிரூபணம்; அமைச்சர் பியூஷ் கோயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என ராகுல் சொல்கிறார். ராகுலின் எதிர்மறை சிந்தனை தவறு என்பதை இந்தியா நிரூபித்துள்ளது' என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.இது குறித்து, பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா குறித்து ராகுல் போன்ற தலைவர்களின் எதிர்மறை சிந்தனை தவறு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என ராகுல் கூறுகிறார். கடின உழைப்பாளிகளான 140 கோடி இந்தியர்கள் இந்திய பொருளாதார வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளனர். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.தற்போது இந்தியாவுக்கு என்ன ஆற்றல் உள்ளது. பொருளாதாரம் எவ்வளவு வலிமையானது. இந்தியா எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பது தெளிவாகி உள்ளது. வறுமையை ஒழிக்கும் பணிகள் இந்தியாவில் எவ்வாறு வெற்றிகரமாக செய்யப்படுகின்றன.வரும் ஆண்டுகளில், குறிப்பாக 2027ம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். 2047ம் ஆண்டிற்குள் தன்னம்பிக்கை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைப்படி, 2047ம் ஆண்டிற்குள் அவரது தீர்மானத்தை நிறைவேற்றுவோம்.2036ம் ஆண்டில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கும் நல்ல சூழல் நிலவுகிறது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
ஆக 31, 2025 23:27

ராகுளு ஒரு தற்குறி இவர விட லொள்ளு பிரசாத் மகன் தேவலை. காங்கரஸ் கட்சி இப்படி சுய அறிவற்ற சொல்வார் பேச்சி கேட்க்கும் பொறுப்பற்றவர ஏன் கட்டிக்கிட்டு அழணும். சிறந்த அறிவாளி கள் இல்லையா? நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கும் பஞ்சமா?


Suppan
ஆக 31, 2025 22:05

இந்த அழகில் சி வோட்டர் என்ற நிறுவனம் நடத்திய "கருத்துக்கணிப்பில்" 59% சதவீத மக்கள் ராகுலின் பிதற்றலை நம்புகிறார்களாம்.


தமிழ் மைந்தன்
ஆக 31, 2025 21:47

ஏற்கனவே தமிழகத்தில் ஒரு கோமாளி உளறிக்கொண்டுள்ளது இது போதாதென்று டில்லியில் ஒரு பெரிய கோமாளி


duruvasar
ஆக 31, 2025 19:24

எழுதி கொடுத்ததை படிக்கும் மேதாவிகளுக்கு பொறுப்பிலிருப்பவர்கள் பதில் தருவதை தவிர்க்கவேண்டும்.


V Venkatachalam
ஆக 31, 2025 19:44

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனா இந்த பப்பு அதை ஒரு கருவியாக்கி பார் மோடி கிட்ட பதில் இல்லை. நான் சொல்றதுதான் சரி. போருளாதாரத்தை காணவில்லை என்று மேலும் எதிராக பிரச்சாரம் செயவார். அதனால ஒரு பதில் சொல்லி வைக்கத்தான் வேணும். கடிக்க வேண்டாம். சீறியாவது வைக்கணும்.


சமீபத்திய செய்தி