உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பு குறித்து ராகுல் பேச்சு: தேர்தல் கமிஷனில் புகார்

அரசியலமைப்பு குறித்து ராகுல் பேச்சு: தேர்தல் கமிஷனில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் பேசியதற்கு எதிராக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் அத்வாலே தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார்.லோக்சபா தேர்தலில் மீண்டும் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என ராகுல் தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களில் பேசி வருகிறார். அதேநேரத்தில் பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது என மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்நிலையில், பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் பேசியதற்கு எதிராக மத்திய அமைச்சர் அத்வாலே தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்கள் சந்திப்பில், ‛‛மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக ராகுல் அடிக்கடி கூறி வருகிறார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி இந்த குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளார். ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
மே 10, 2024 00:13

சட்டத்திற்கு எதிராக பேசிவரும் ராகுலின் பிரச்சாரத்தை தடை செய்வது ஜனநாயகத்திற்கு நல்லது


Lion Drsekar
மே 09, 2024 16:29

ஏதாவது சாதனைகளை செய்திருந்தால் அவைகளை விளக்கலாம் , இங்குதான் எந்த கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் வற்றாத ஜீவநதிபோல் தினம் தினம் ஏதோ ஒரு நிலையில் அவர்ளுக்கு ஏதாவது ஒரு வழியில் தண்டல் , சுரண்டல், லஞ்சம், மிரட்டல், வழிகளில் ஆயிரம் முதல் பல லட்சம் கோடி வரை வருவதால், முழுக்கவனமும் சொத்து சேர்ப்பதில்தான் இருக்கிறதே தவிர , மக்கள் என்ற ஒரு நம் வாழ்வதையே மறந்து , தன்னிலை மறந்து செயல்படும் சர்வாதிகார குடும்பங்களின் கீழ் சுதந்திரம் என்று விட்டது வருத்தம் இவர்களாக திருந்தினால் மட்டுமே ஜனயாகத்துக்கு வழி பிறக்கும் வந்தே மாதரம்


என்றும் இந்தியன்
மே 09, 2024 16:27

பாஜ, அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியதற்கு எதிராக????இதில் என்னய்யா தப்பு முஸ்லீம் நேரு அரசியலமைப்பு சட்டத்தை மிக மிக கேவலமாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக அமைத்திருக்கின்றார் என்று எவ்வளவு சத்தமாக சொல்கின்றார் இந்த பப்பு ராகுல் இது உண்மை தானே அதை முஸ்லீம் நேரு காங்கிரஸ் பதவிக்கு வந்தால் ஒன்றும் செய்யாது பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்திய மக்களுக்காக இந்திய அரசியலைமப்பு சட்டம் மாற்றப்பட்டு விடும் இப்போது இருக்கும் வெறும் முஸ்லிம்களுக்காக என்று இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை என்று அலறிக்கொண்டிருக்கின்றார்கள் இது தான் நிஜம்


Sivak
மே 09, 2024 16:41

முற்றிலும் உண்மை


krishnamurthy
மே 09, 2024 16:25

சரியான நடவடிக்கையே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி