மேலும் செய்திகள்
கஞ்சா, குட்கா விற்ற ஐந்து பேர் கைது
14-Oct-2024
சாம்ராஜ்பேட்டை: வெளிநாடுகளில் இருந்து வந்த 606 பார்சலில் 21.17 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை, சி.சி.பி.,யின் போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் அவ்வப்போது ரெய்டு நடத்தி, வெளிநாடு பிரஜைகள் உட்பட பலரை கைது செய்து வருகின்றனர்.செப்டம்பரில் எச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீசார் மற்றும் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவின் போதைப்பொருள் தடுப்பு போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து பார்சல் மூலம், பெங்களூரில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு வருவதாக தெரிவித்தனர்.இதையடுத்து, சி.சி.பி., போலீசாரும், சுங்க அதிகாரிகளும் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தை கண்காணித்தனர். நேற்று காலை அதிரடியாக இந்த அலுவலகத்தில், மோப்ப நாய் உதவியுடன் ரெய்டு நடத்தினர்.சந்தேகத்திற்கிடமாக இருந்த 3,500 பார்சல்களில், 606ல், 28 கிலோ ஹைட்ரோ கஞ்சா; 2,569 எல்.எஸ்.டி.; 1 கிலோ எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல்கள்; 11,908 எக்ஸ்டசி மாத்திரைகள்; 770 கிராம் ஹெராயின்; 102 கிராம் கோகைன்; 6.280 கிலோ ஆம்பெடமைன். 336 கிராம் சரஸ்; 1 கிலோ கஞ்சா; 445 கிராம் மெத்கிளீன்; 11 இ - சிகரெட்கள்; 102 மில்லி நிகோடின்; 400 கிராம் புகையிலை என 21.17 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.இந்த போதைப்பொருட்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், தாய்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.வெளிநாட்டு தபால் அலுவலக நிர்வாகிகளிடம் விசாரிக்கின்றனர்.� மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய சி.சி.பி.,யின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்.� பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை வடிவிலான போதை பொருள்.
14-Oct-2024