உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆள் மாறாட்டத்தில் ரயில்வே வேலை; மனைவியை போட்டு கொடுத்த கணவன்

ஆள் மாறாட்டத்தில் ரயில்வே வேலை; மனைவியை போட்டு கொடுத்த கணவன்

ஜெய்ப்பூர்: மனைவிக்கு, 15 லட்சம் ரூபாய் கொடுத்து வேலை வாங்கி தந்தவர், மனைவி தன்னை விட்டு பிரிந்ததால், கடும் கோபம் அடைந்து ரயில்வே துறையில் புகார் அளித்தார். அதன் வாயிலாக, ரயில்வே தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது.ரயில்வே துறை பணியில் சேர, 'ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு' நடத்தும் தேர்வை எழுத வேண்டும். இப்படி எழுதிய தேர்வில், ஆள் மாறாட்டம் செய்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது, தற்போது அம்பலமாகி உள்ளது.ரயில்வேயில் தற்காலிக ஊழியரான, ராஜஸ்தான் மாநிலம், கோடாவைச் சேர்ந்த மணிஷ் மீனாவுக்கு, 2022-ல் திருமணமானது. தன் மனைவி ஆஷா மீனாவுக்கு, ரயில்வேயில் நிரந்தர வேலை வாங்கித் தர முடிவு செய்தார். ஆஷாவின் உறவினர் ஒருவர், ரயில்வே காவலரான ராஜேந்திரா என்பவரை அறிமுகப்படுத்தினார். மணிஷ், தன் நிலத்தை விற்று ராஜேந்திரா வாயிலாக ஜபல்புர் ரயில்வே அதிகாரிகளுக்கு, 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். கடந்த 2022 ஆக., 30ல் ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய கிரேட் 4 தேர்வில், ஆஷாவுக்கு பதில் லட்சுமி என்ற பெண்ணை தேர்வு எழுதச் செய்து, ஆஷாவுக்கு வேலை கிடைத்தது.வேலை கிடைத்த சில மாதங்களிலேயே, கணவனை வேலை இல்லாதவன் எனக் கூறி ஆஷா பிரிந்து விட்டார். மனைவியின் நம்பிக்கை துரோகத்தால் ஆவேசமான மணிஷ், மேற்கு மத்திய ரயில்வே துறையில் புகார் அளித்தார்.ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையில், மணிஷ் கூறியவை உண்மை என்றும், ஆஷாவுக்கு பதிலாக தேர்வு எழுதிய லட்சுமி, ஏற்கனவே பலருக்கு இதுபோன்று தேர்வு எழுதிக் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய லட்சுமி, டில்லி போலீசில் பணிபுரிகிறார். மோசடியாக வேலை பெற்ற ஆஷா, அவருக்கு துணையாக இருந்த ராஜேந்திரா ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இந்த மோசடி மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. பெரிய அளவில் ரயில்வே பணி மோசடி வெளியாகும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
பிப் 11, 2025 11:00

வட இந்தியர்கள் எல்லா தேர்வுகளிலும் இதேபோல் திருட்டுத்தனம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இதற்கு மத்திய பாஜக அரசின் எல்லா துறைகளும், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டுக் களவாணிகள்!


visu
பிப் 11, 2025 20:10

என்னமோ காங்கிரஸ் ஆண்டபோது இது போன்ற மோசடிகள் நடக்காத மாதிரி பேசறீங்க வித்தியாசம் இந்த முறை அர்சியல்வாதிகள் சம்பந்தப்படவில்லை


Sampath Kumar
பிப் 11, 2025 09:45

ஊழல் அற்ற நேர்மையான அரசு பிஜேபி அரசு அதுக்கு குந்தகம் விளைவிக்கம் நோக்கில் செய்தி வேலி இடுவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று பிஜேபி சொம்புகள் பதிவு போடுவனுக்க பாருங்க பிஜேபி ஆட்சிக்கு வந்தகாலம் தொட்டு ரயில்வே துறை ஊழலின் ஊற்று கண்ணாகி விட்டது வட்டக்கின் மட்டுமே இந்த துறையில் வேலை தினம் பெறுகின்றான் ஒரு கடை நிலை ஊழியர் வேலைக்கு கூட தமிழ் தேர்வு செய்ய படுவது இல்லை அதனை வன்மமும், லஞ்சம் ஊழலும் பெருகி விட்டது பிஜேபி ஆட்சில் இதனை சொன்னால் தேச துரோகி என்பான் சங்கி பிஜேபி ஆட்சி ஓல்lika பட வேண்டிய ஆட்சி என்பதைமக்கள் புரிய தொடக்கி விட்டார்கள்


SANKAR
பிப் 11, 2025 07:56

no comment on theeyamuka and thiruttu dravidiyal?!


Senthoora
பிப் 11, 2025 05:13

வடக்கர்களுக்கு கண்ணதாசன் பாடல் சொல்லி கொடுக்கணும். ஏறிவந்த ஏணியை தள்ளக்கூடாது என்று.


Padmasridharan
பிப் 11, 2025 04:25

"ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய லட்சுமி, டில்லி போலீசில் பணிபுரிகிறார்" இந்தியா ஒழுங்கான நாடாக்கனும்னா இந்த மாதிரி அதிகார பிச்சைக்கார ஆட்களை காவலர்களை Suspend/Transfer செய்யாமல் Dismiss செய்யவேண்டும்


நிக்கோல்தாம்சன்
பிப் 11, 2025 03:50

இதனால் தான் பல வடஇந்தியர்கள் ரயில்வே பணியில் உள்ளார்களா ?


Ram Moorthy
பிப் 11, 2025 02:13

கஷ்டப்பட்டு தேர்வு எழுதும் ஏழை மக்களுக்கு எந்த அரசு பணியும் கிடைப்பதில்லை இப்படி ஊழல் செய்து வேலை கிடைப்பது தான் அதிகமாகி விட்டது இதை எல்லாம் எப்போது தடுக்க தண்டிக்க முடியும்


Kundalakesi
பிப் 11, 2025 01:25

கணவருக்கு துரோகம் செய்தால் இதான் நடக்கும். களி திங்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை