உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் நிலச்சரிவு அபாயம்: மோந்தா புயல் பற்றி வானிலை மையம் எச்சரிக்கை

ஒடிசாவில் நிலச்சரிவு அபாயம்: மோந்தா புயல் பற்றி வானிலை மையம் எச்சரிக்கை

புவனேஸ்வர்: மோந்தா புயலால் ஒடிசாவின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து புவனேஸ்வரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறியதாவது;அக்.28ம் தேதி காலைக்குள் மோந்தா புயல் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அன்றைய தினம் மாலை அல்லது இரவில் காக்கிநாடாவை சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும்.புயல் கரையை கடக்கும் தருணத்தின் போது, மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் கடுமையான சூறாவளிக்காற்று வீசும். இந்த காற்று அதி தீவிரமாக வீசக்கூடும். அதன் காரணமாக அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு ஒடிசாவில் பலத்த மழை பெய்யும். பெரும்பாலான மாவட்டங்களில் மழை இருக்கும். நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMESH KUMAR R V
அக் 27, 2025 21:52

அபாயகரமான இடங்களிலிருந்து மக்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பதே புத்திசாலித்தனம்.


சமீபத்திய செய்தி