உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 முறை ஹாட்ரிக் கோல் அடித்தவர் கால்பந்தின் ராஜா வினோத்குமார்  ஆடுகளம்

2 முறை ஹாட்ரிக் கோல் அடித்தவர் கால்பந்தின் ராஜா வினோத்குமார்  ஆடுகளம்

இந்தியர்களுக்கு அதிகம் பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் இருந்தாலும், கால்பந்து மீதும் தனி ஆர்வம் உண்டு. கேரள வாலிபர்கள் கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிப்பர். கால்பந்து வீரர்களுக்கு எல்லாம் என்றாவது ஒரு நாள், லயோனல் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிவிட மாட்டோமா என்ற ஆசை இருக்கும்.மெஸ்சி, ரொனால்டோ ஆட்டத்திற்காக கால்பந்தை பார்ப்பவர்கள் ஏராளம். கால்பந்தில் ஒரு கோல் அடிப்பது மிகவும் அரிதானது. பல வீரர்களை ஏமாற்றி கோல் அடிக்க வேண்டும். ஆனால் கால்பந்தில் இரண்டு முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஜாம்பவானும் உள்ளார்.பெங்களூரை சேர்ந்தவர் வினோத்குமார், 30. கால்பந்து வீரர். சிறுவயதில் இருந்தே கால்பந்து வீரராக வேண்டும் என்று ஆசை. வீட்டின் அருகே உள்ள மைதானங்களில், கால்பந்து விளையாடுபவர்களுடன் சென்று சேர்ந்து கொள்வார். நுணுக்கமாக கால்பந்து விளையாடியதால், மைதானத்தில் அவரை மிட் பில்டர் இடத்தில் நிற்க வைப்பராம்.கடந்த 2010 - 2011ல் பெங்களூரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பி.சி., ராய் கால்பந்து டிராபி நடந்தது. எலஹங்காவில் ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலை அணி சார்பில் விளையாடினார். பெரிய அளவில் கோல்கள் அடிக்காவிட்டாலும், அவரது ஆட்டத்தை பார்த்து, ஹெச்.ஏ.எல்., நிறுவனம் கடந்த 2011 ஆகஸ்ட் 22ல் தங்கள் அணியில் இணைத்து கொண்டது.கடந்த 2011 அக்டோபர் 22ம் தேதி, ஹெச்.ஏ.எல்., அணிக்காக முதல்முறை அதிகாரபூர்வமாக கால்பந்து விளையாடினார். அந்த போட்டியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2012 டிசம்பர் 13ம் தேதி சவுத் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில், முதல் கோல் அடித்து அசத்தினார்.கடந்த 2012 டிசம்பர் 19ம் தேதி மாணவர்கள் யுனியன் அணிக்கு எதிரான போட்டியில் ஹெச்.ஏ.எல்., 5 கோல்கள் அடித்தது. அதில் வினோத்குமார் மட்டும் ஹாட்ரிக் கோல் அடித்தார். கடந்த 2013ல் டி.ஒய்.எஸ்.எஸ்., அணிக்கு எதிரான போட்டியில் 2 வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார். அந்த போட்டியில் மட்டும் 10 கோல்கள் அடித்து அசத்தினார்.கடந்த 2013ல், சவுத் யுனைடெட் அணிக்கு விளையாட ஒப்பந்தம் ஆனார். அந்த ஆண்டில் மார்ச்சில் நடந்த ஹிந்துஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்தார். கால்பந்து விளையாட்டில் உச்சத்தில் இருக்கும் போதே, ரிசர்வ் வங்கியில் அவருக்கு பணி கிடைத்தது. பின், கர்நாடக அணிக்காக சந்தோஷ் டிராபியிலும் விளையாடினார். அதன்பின் தன் ஓய்வை அறிவித்தார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ