மேலும் செய்திகள்
ஹரியானா சட்டசபை 13ல் கூடுகிறது
06-Nov-2024
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இயற்றப்பட்டு உள்ள மதமாற்றத் தடை மசோதாவுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில், சட்டவிரோத மதமாற்ற தடை மசோதாவுக்கு, விரைவில் நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சட்ட மசோதா, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவருக்கு 1 - 5 ஆண்டுகள் வரை சிறை உட்பட கடுமையான தண்டனைகளை முன்மொழிகிறது. இது குறித்து முதல்வர் பஜன்லால் சர்மா வெளியிட்ட அறிக்கை: சட்டவிரோத மத மாற்றத்தை தடுப்பதில் ராஜஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. இதற்கான புதிய சட்ட மசோதாவை, சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த உள்ளோம்.இதன்படி, தவறான தகவல் அளித்தோ, மோசடியாகவோ அல்லது கட்டாயப்படுத்தியோ ஒரு நபரை மத மாறச் செய்தால், அதை செய்த தனிநபர் அல்லது அமைப்பு, தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவரை மதமாற்றம் செய்யும் நோக்கத்தில் திருமணம் செய்தால், அந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிப்பதற்கு, குடும்ப நீதிமன்றத்திற்கு புதிய சட்டம் உரிமை வழங்குகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
06-Nov-2024