உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரம்மபுத்திராவில் சீனா அணை கட்ட முயற்சி; இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கிறது; சொல்கிறார் ராஜ்நாத் சிங்

பிரம்மபுத்திராவில் சீனா அணை கட்ட முயற்சி; இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கிறது; சொல்கிறார் ராஜ்நாத் சிங்

ஆக்ரா: திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் மெகா அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்து அரசு எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார் .நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியில் பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. திபெத்தில் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட அணை கட்டும் திட்டத்தால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது' என, சீனா விளக்கமளித்துள்ளது.இது குறித்து உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: முன்பு, சர்வதேச அரங்கில் இந்தியா பேசும்போது, உலக நாடுகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் இப்போது இந்தியா பேசும்போது, உன்னிப்பாக கவனிக்கிறது. இந்தியா இன்று ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேறி வருகிறது. முன்பு பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது.இப்போது இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வரும் இரண்டரை ஆண்டுகளில், முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும். அரசியல் ஆதாயங்களைக் காட்டிலும் மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றி தான், பா. ஜ., அரசு அதிக அக்கறை காட்டுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் மிக அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்து மத்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜன 08, 2025 16:05

உன்னிப்பாக கவனிக்கிறாராம், வேறென்ன செய்ய முடியும் இவர்களால்? கையாலாகாதவர்கள் கும்பலைச் சேர்ந்தவர் இவர்! பாஜகவில் எல்லோருமே வாய்ச் சவடால் பேர்வழிகள்!


veera
ஜன 08, 2025 16:28

தமிழ்நாட்டில் கட்டிய பாலம் இடிந்து விழுந்ததுபோல ...அப்படித்தானே வேணு.....ரொம்ப குசும்பு


பிரேம்ஜி
ஜன 08, 2025 10:15

கட்டுவதை வேடிக்கைதான் பார்க்கலாம்!


Barakat Ali
ஜன 08, 2025 09:59

சீனாவை நம்பக்கூடாது .... ஐ ஐ டி சிவில் பொறியியல் / ஆர்க்கிடெக் பேராசிரியர்களால் ஆய்வு நாத்தப்பட வேண்டும்... சீனாவிடமிருந்து அணையின் தொழில்நுட்பத் தகவல்களைப் பெறவும் முயற்சி செய்யவேண்டும்.. சீனாவுக்காக இங்கே வேலை செய்யும் திமுக, காங்கிரஸ் கேட்டுக்கொண்டால் சீனா விபரங்களைக் கொடுக்க வாய்ப்பு .....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 08, 2025 09:48

உடனடியாக திமுக அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு கிளை ஆரம்பிக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் அந்த வேலையை ஒப்படைக்கலாம். சீனா அணை கட்டிவிட்டால் பிரம்மபுத்திராவில் தண்ணீர் வராது. அப்படியானால் அந்த ஆற்று படுகையில் உள்ள எல்லா மணலும் நமக்குத்தான். திமுகவிற்கு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய விஞ்ஞான முறை தொழிலில் ஆர்வம் திறமை அதிகம். கழகத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பாமரன்
ஜன 08, 2025 09:06

வரவர இந்த சீனாவின் நடவடிக்கையை இந்தியா உண்ணிப்பாக கவனிக்கிறது அப்பிடின்னு பேசுற சம்பிரதாய பேச்சு இந்தியா வல்லரசாகும் கருப்பு பூச்சாண்டியை புடிப்போம் மாதிரி ஆகிடிச்சு... இதே பாகிஸ்தான்னா அம்பத்தாறு ஆஊன்னு சொல்லலாம்... இப்போல்லாம் அவன் மட்டுமல்ல இலங்கை நேபாளம் வங்கதேசம் மாலத்தீவு மாதிரி பூசாசிங்க கூட அம்பத்தாறை மதிக்க மாட்டேங்குதுக... மியாவ் மியாவ்...


veera
ஜன 08, 2025 10:46

என்ன நடந்தாலும் உனக்கு இங்கே உண்டசோரு, 200 ரூபாயும் கிடைக்கும்....அப்புறம் என்ன மியாவ்....


Dharmavaan
ஜன 08, 2025 08:52

சீனாவின் திருட்டு புத்தி இந்தியாவை பாழாக வேண்டும் என்பதே.எனவே கோடைகாலத்தில் எல்லா நீரையும் நிறுத்துவான் மழைக்காலத்தில் முழு நீரையும் திறப்பான் அழிவுக்காக நாம் ஒரு அணை கட்டி இதை தடுக்க வேண்டும்


பாமரன்
ஜன 08, 2025 09:14

இந்த தர்மவான் மாதிரி அறிவுவாளிங்க இன்னும் நிலாவுல பாட்டி வடை சுடுது அவன் டேம் கட்டி நம்ம நாட்டுல தண்ணி விடுவான்னு நம்புற பீஸ்களால் தான் பகோடா கம்பெனி வாழ்ந்துகிட்டு இருக்கு... அவனுவளோட கட்டுமானங்கள் வேற லெவல்ல போகுது... இந்த ஒரு டேம் கட்ட ஆகும் செலவு கிட்டத்தட்ட இந்தியாவின் பாதி கடனளவு... தம்மாத்தூண்டு பாம்பன் பாலம் வருஷக்கணக்கா கட்டும் நாம் அதைவிட லட்சம் மடங்கு பெரிய ப்ராஜக்ட்களை ஜஸ்ட் லைக் தட் செய்யறவன்ட்ட இருந்து கத்துக்க பார்க்கனும்... வயிற்றெரிச்சல் பட்டு பிரயோஜனமில்லை...


Dharmavaan
ஜன 08, 2025 14:09

பாமரன் என்ற சீன கைக்கூலி நம் நாட்டை கேவலப்படுத்துகிறது இது போன்ற எதற்கும் முட்டுக்கட்டை போடும் அரசியல் நிலையில் இவற்றை செய்வதே பெரிய வேலை. சீனாவைப்போல் எதிர்ப்பு இல்லாமலிருந்தால் மோடி அரசு வேறு மாதிரி செயல்படும் ...நர்மதா டாம் பற்றி பேசு


Dharmavaan
ஜன 08, 2025 14:12

கொரோன போன்ற விஷ கிருமிகளை விட்டவனும் சீனாதான் அறிவுள்ளவனுக்கு புரியும்


Jay
ஜன 08, 2025 08:29

பிரம்மாண்ட அணைகளைக் கட்டி திபெத்து பாலைவனம் முழுவதும் பயன்படுத்த சீனா திட்டம் தீட்டி வருகிறது. வருங்காலத்தில் எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் பிரம்மபுத்ரா ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீர் வரவே வராது. ஏற்கனவே சீனாவில் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் செல்லும் கால்வாய்களை அமைத்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். பிரம்மாண்ட அலைகளைக் கட்டி 2000 கிலோ மீட்டர்கள் அல்லது 3000 கிலோ மீட்டர்களுக்கு வருங்காலத்தில் கால்வாய்களை அமைத்து தண்ணீரும் முழுவதையும் எடுத்துச் செல்ல திட்டமிடுவார்கள்.


சமீபத்திய செய்தி