உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., எம்.பி., அபிஷேக் சிங்வி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம்; விசாரணைக்கு உத்தரவு

காங்., எம்.பி., அபிஷேக் சிங்வி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம்; விசாரணைக்கு உத்தரவு

புதுடில்லி: 'ராஜ்யசபா காங்., எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது' என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,06) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் இன்றைய அலுவல் நேரங்கள் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபாவை டிசம்பர் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8nios4vr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராஜ்யசபா அவை கூடியது, தெலுங்கானாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்வி மீது ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியதாவது: காங்., எம்.பி., அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கிய இருக்கையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ராஜ்யசபாவிற்குள் பணம் வந்தது எப்படி? பின்னணியில் வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று அவை நடவடிக்கைகள் முடிந்த பின் நடந்த சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், 'விசாரணை முடிந்து, சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை, ஒரு உறுப்பினரின் பெயரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்' என வலியுறுத்தினார்.

கண்ணியம்

ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா கூறியதாவது: இந்த சம்பவம் தீவிரமானது. இது சபையின் கண்ணியத்தை புண்படுத்துகிறது. விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவை தலைவர் கூறியதால், உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார்.

அபிஷேக் மனு சிங்வி விளக்கம்

இந்த குற்றச்சாட்டு குறித்து, காங்., எம்.பி அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: நான் நேற்று ராஜ்யசபாவுக்கு செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே எடுத்து சென்றேன். 12.57 மணிக்கு அவைக்குள் நுழைந்தேன். 1 மணிக்கு அவை கலைந்து விட்டது. 1.30 மணி வரை கேண்டீனில் இருந்தேன். அதன் பிறகு பார்லிமென்டில் இருந்து கிளம்பிவிட்டேன். இந்த விவகாரம் பற்றி, இப்போது தான் முதல்முறையாக கேள்வி படுகிறேன். ஒவ்வொரும் எம்.பி.,யும் இருக்கையை பூட்டி சாவி எடுத்து செல்லக்கூடிய வகையில் இருக்கை இருந்தால் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கலாம். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக நடந்து இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். இது குறித்து தவறு இருந்தால் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரபல வக்கீலான அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் முக்கிய வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகுபவர் என்பதை குறிப்பிடத்தக்கது.

ராகுல் பேரணி

இதற்கிடையே, அதானி விவகாரம் குறித்து பார்லி., கூட்டு குழு விசாரணை நடத்த வலியுறுத்தி, பார்லிமென்ட் வளாகத்தில், அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியவாறு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா பேரணி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

gayathri
டிச 07, 2024 10:08

முதலில் எவ்வளவு பணம் என்று சொல்லுங்க . இதை கூட கண்டுபிடிக்க முடியாதா. இந்த அரசால். எல்லாம் மக்களிடம் கொள்ளை அடிப்பதுதானா. எந்த கட்சி ஆட்சி என்றாலும்.


குப்புராஜ்
டிச 06, 2024 22:19

கடசீல எம்.பி க்களுக்கு சம்பளம் போட வெச்சிருந்த பணம்னு சொல்லி ஊத்தி மூடிடுவாங்க.


அப்பாவி
டிச 06, 2024 22:16

மொட்டையா இருக்கையில் இருந்திச்சுன்னு சொன்னா எப்படி? இருக்கையின் மேலே இருந்திச்சா? இல்லே சீட்டோட வெச்சு தைச்சிருந்தாங்களா? எவ்ளோ இருந்திச்சு? ஒரு 10 கோடி? அதுக்கு கீழே இருந்தா அது எம்.பி க்களுக்கு வெறும் பஃப்ஸ் மணி.


சபா
டிச 06, 2024 22:07

ராகுலும் ப்ரியங்காவும் இத்தாலி நாட்டு அரசியல் சாசனத்தை கையில் ஏந்துங்கள் பொறுத்தமாக இருக்கும்!!


sankaranarayanan
டிச 06, 2024 21:26

அபிஷேக சிங்விக்கு அவர் உட்கார்ந்த இடத்தில் அவருக்கே தெரியாமல் பணம் அபிஷேகம் நடந்தேறியுள்ளத்து என்றுதான் அர்த்தம் இதைவிட வேறன்ன விளக்கமாக வேண்டும்


M Ramachandran
டிச 06, 2024 20:53

இதை தான் மடியில் கணம் என்பார்களோ பொய்யர் மொழி மன்னனிடமும் தீர விசாரிக்க வேண்டும்.எய்தவன் இருக்க அம்பை நோவதேன்


Ganapathy
டிச 06, 2024 19:20

3 நிமிடந்தான் இவன் ஸபையில் இருந்துள்ளான். ஆனா 30 நிமிடம் கேன்டீனில் இருந்துள்ளான். இவன்தான் படித்த தன்க்கு ஓட்டுபோட்ட மக்களின் பாராளுமன்ற பிரதிநிதி. மதியம்தான் பாராளுமன்றம் கூடுகிறதா? காலையில் இவன் ஏன் செல்லவில்லை? இதற்கு இவனுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏராளம். எல்லாம் நமது வரியில். நாசமாப்போச்சு.


அப்பாவி
டிச 06, 2024 17:14

நம்ம வங்கிக்கணக்குக்கு அஞ்சு பைசா வந்தாலே RBI, இன்கம்டாக்ஸ், அமலாக்கத்துறை எல்லாத்துக்கும் மெசேஜ் பறந்து அப்டேட் ஆயிரும். இங்கே என்னடான்னா கட்டுக் கட்டா பணம் பறந்து வந்தா இறங்கியிருக்கு. எப்பிடி செக் பண்ணாம உள்ளே உட்டாங்க? .


ஆரூர் ரங்
டிச 06, 2024 17:09

கோழி முட்டை போட்ட மாதிரி சீட்டில் முளைத்திருக்கும். புரியல.


அசோகன்
டிச 06, 2024 16:34

அடப்பாவிகளா இதுவரை பொதுமக்களைதான் காசு சாராயம் பிரியாணி கொடுத்து கூட்டம் கூட்டின்னீர்கள்..... இப்போ பார்லிமெண்டில் சத்தம் போட கலாட்டா பண்ண MP க்கு பணமா...... கேவலமான அரசியலுக்கு போயிடுச்சி காங்கிரஸ்...... எல்லாம் வெளிநாட்டு deep ஸ்டேட்ஸ் பணம்....... இனி மீண்டும் காசுக்கொடுத்து விவசாயிகள் போராட்டம் என நாடகம் தொடங்கும்.....


முக்கிய வீடியோ