உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் பாலம்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி புதிய மனு

ராமர் பாலம்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி புதிய மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'இந்தியா - இலங்கை இடையே உள்ள ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தரப்பில், 2019ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய கலாசார அமைச்சகத்தை சுப்பிரமணியசாமி அணுகலாம் என்றும், ஒரு வேளை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி, புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கூறியுள்ளதாவது: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, பலமுறை மத்திய அரசை ராமர் பாலம் தொடர்பான விவகாரத்தில் அணுகினேன். ஆனால், எந்த பதிலையும் மத்திய அரசு வழங்காததால், மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளேன். எனவே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். - புதுடில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
மே 27, 2025 16:31

பாஜகவுக்கு ஹிந்து மதத்தின் மீது உண்மையான அக்கறை கிடையாது என்பதற்கு இதுவே சாட்சி!


நிவேதா
மே 27, 2025 09:05

Good. நீங்கள் அமலாக்கத்துறையை எதிர்த்தும் கேஸ் குடுங்க. அந்த துறையால் சென்சேஷனல் நியூஸ் மட்டுமே குடுக்கமுடிகிறது. அதன்பிறகு அந்த வழக்குகள் எங்கே போகின்றன எனக்கூட தெரியவில்லை. இந்த டாஸ்மாக் விஷயத்திலும் ஊழல் நடந்தது, நடக்கிறது இன்னும் நடக்கும். அமலாக்கத்துறை சில அரசியல் புள்ளிகளை கைது செய்து சில மாதங்கள் சிறை வைத்தாலும் சார்ஜ் சீட் பைல் செய்தபின் அவர்கள் ஜாமினில் வெளியே வந்து விடுவார்கள். அதன் பிறகு ஒன்றும் நடக்கப்போவதில்லை.


ராமகிருஷ்ணன்
மே 27, 2025 05:30

இந்து விரோத 200 ரூபாய் ஊபிஸ் களுக்கு ஒரு விஷயம் கிடைத்து விட்டது. வரிசையில் வந்து கதறுங்கடா


மீனவ நண்பன்
மே 27, 2025 05:07

சு.ஸ்வாமி டாஸ்மாக் விஷயத்தை கையில் எடுத்தால் விடியல் ஆட்சிக்கு ஆப்பு அடித்த மாதிரி இருக்கும்


புதிய வீடியோ