உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் பிரதிஷ்டை: தீப ஒளியில் ஜொலித்த சராயு நதிக்கரை

ராமர் கோயில் பிரதிஷ்டை: தீப ஒளியில் ஜொலித்த சராயு நதிக்கரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியின் சராயு நதிக்கரை மின் விளக்குகளால் ஜொலித்தது. நாடு முழுதும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கோவிலில் ராம சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்து பிராண பிரதிஷ்டை செய்தார்.இதையடுத்து சராயு நதிக்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்தொடர்ந்து மாலை வீடு தோறும் கார்த்திகை தீபம் போல அகல் விளக்குகளில் தீபமேற்றி ஒளியேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பல்வறு இடங்களில் விளக்கேற்றி வழிபட்டனர். நேபாளில் பிரசித்திபெற்ற ஜனக்புரி என்ற இடத்தில் உள்ள கோயிலில் பொதுமக்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வெகுளி
ஜன 22, 2024 19:49

இப்படி ஒருநாள் எங்கள் கூவம் நதியும் ஜொலிக்கும்... 2026ல் அண்ணாமலை ஆட்சியில் அதற்கான பணிகள் தொடங்கும்.... இன்று யோகிஜிக்கு கிடைத்த பாக்கியம் நாளை அண்ணாமலை அவர்களுக்கும் கிடைக்கும்...


Seshan Thirumaliruncholai
ஜன 22, 2024 19:18

விளக்கு நாள்தோறும் ஏற்றுவது அதனை வாசல் திண்ணையில் உள்ள பிறையில் வைப்பது என்ற வழக்கம இருந்தது. காலப்போக்கில் நின்றுவிட்டது. தீபம் ஏற்றுவது ஒரு மங்களமான செய்கை. இதனை ஏன் தொடரக்கூடாது?


கல்யாணராமன்
ஜன 22, 2024 18:59

ஜெய் ஸ்ரீராம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை